Asianet News TamilAsianet News Tamil

அப்போ பூங்குன்றன்... இப்போ ஜனார்தனன்! எத்தனை நாளைக்குத் தான் இந்த அல்லக்கைகளுக்கு அடிபணிவது? புகார்களோடு புலம்பும் நிர்வாகிகள்....

janarthanan act like jayalalithaas PA Poongundran
janarthanan act like jayalalithaa's PA Poongundran
Author
First Published Jul 23, 2018, 12:52 PM IST


கடந்த சில நாட்களாக  தினகரனைப் பார்க்க தமிழகம் முழுவதிலுமிருந்து படையெடுத்து வருகின்றனர் அவர் யாரையும் சந்துயக்க முடியவில்லை என புகார் சொல்லுகின்றனர். இதேபோல நேற்று முன்தினம் கூட அஷ்டமி என்பதால் எல்லாச் சந்திப்புகளையும் தவிர்த்துவிட்டார்.  இதற்க்கு அடுத்த நாள் சந்தித்த தொண்டர்கள் கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக வந்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த சில ‘கட்சிக்கு நிர்வாகிகளை நியமிச்சதுல எங்களுக்கு சந்தோஷம்தான். ஆனால் அதுக்குத் தகுதியான ஆளுங்களைப் போடணும்  தான? மம்மி  இருந்தவரைக்கும் யாரை எந்தப் பொறுப்புக்கு போடுவாங்கன்னு ‘நமது எம்.ஜி.ஆர்’இல் லிஸ்ட் வர்ற வரைக்கு தெரியாது. ஊரு பேரு தெரியாதவன் கூட மாஸ் ஆயிடுவானுங்க. அதற்கு அப்புறமா சின்னமம்மி சொந்தக்காரங்க சொல்ற ஆளுங்களுக்குத்தான் பொறுப்பு. அதைத் தாண்டி இன்னொரு அதிகார மையமும் இருக்கும். அது  மம்மியோட அசிஸ்டன்ட் பூங்குன்றன். அவரு சொல்ற ஆட்களுக்கும் பொறுப்பு கிடைக்கும்.

janarthanan act like jayalalithaa's PA Poongundran

அம்மாவோட மறைவுக்குப் பிறகு  தினா கையில் பொறுப்பு வந்துச்சு. தனியாகக் கட்சியும் தொடங்கினாரு. ஆரம்பத்துல சாதாரணத் தொண்டன்கூட நினைச்ச நேரத்துல  தினாவைப் பார்க்க முடிஞ்சது. போயஸ் கார்டன் கேட் பக்கத்துலகூட அதிமுக தொண்டனால் அம்மா இருந்தவரைக்கும் போக முடியாது. ஆனால், தினா வீட்டுக்குள்ளேயே போய் டீ குடிக்கும் சுதந்திரம் ஆரம்பத்தில் இருந்தது. அதனால்தான் தொண்டர்கள் அவரை விரும்பினாங்க; தேடி வந்தாங்க. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது எல்லாமே மாறிடுச்சு. தினா கட்சியில் அதிகாரம் என்பது ஒரு நபர் கைக்குப் போயிடுச்சு. அந்த ஒரு நபர்  தினா இல்லை; அவரது உதவியாளர் ஜனா தான்.

janarthanan act like jayalalithaa's PA Poongundran

கடந்த 6 மாதங்களாகவே ஜனா மீது பல புகார்கள் வந்தன. எல்லாம்  தினா கவனத்துக்கும் போனது. ஆனால், அவர் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குக் காரணம், தினா வீட்டு கிச்சன் கேபினெட். தினா மனைவி அனுராதா ஆரம்பத்தில் ஜெயா டிவியை நிர்வகித்துவந்த காலத்தில், சாதாரண ஊழியராக அங்கே பணியாற்றியவர் ஜனா. அதன் பிறகு,  தினா வீட்டுக்குக் காய்கறி வாங்கி வருவதுவரை எல்லா வேலைகளையும் பார்த்தார். ஒருகட்டத்தில் ஜெயா டிவியிலிருந்து ஒதுங்கி மொத்தமாக தினா வீட்டோடு செட்டிலாகிவிட்டார்.   தினாவின் மொத்த ரகசியங்களும் தெரிந்த ஒரே நபர் இன்று ஜனார்த்தனன்தான். அதனால் தினா அவரைக் கேள்வியும் கேட்பதில்லை. கேட்டாலும்  தினா மனைவி அனுராதா அனுமதிப்பதும் இல்லை.

janarthanan act like jayalalithaa's PA Poongundran

இந்தச் சூழ்நிலையில்தான் புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரானது. பட்டியலைத் தயாரித்தவர் ஜனா. யாருக்கு என்ன பொறுப்பு என்பதைத் தீர்மானிக்கும் முன்னரே சம்பந்தப்பட்டவர்களை அழைத்தும் பேசியிருக்கிறார் ஜனா. ‘இதை அவருக்குக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு வேணுமா?’ எனச் சில டீலும் பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்படிப் பேசிப் பேசித்தான் ஒரு பெரிய நிர்வாகிகள் பட்டியலைத் தலைமை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் எல்லாமே வேடிக்கையாக இருக்கு. சம்பந்தமே இல்லாதவங்களை சம்பந்தமே இல்லாத பொறுப்புக்கு போட்டிருக்காங்க. செய்தித் தொடர்பாளர்களாகச் சிலரை நியமிச்சிருக்காங்க. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில்  தினாவுக்கு பேசி வந்தவர்கள் பலரின் பெயர் புதிய பட்டியலில் இடம் பெறவில்லை. இன்னும் சில நிர்வாகிகள் பட்டியல் வெளியானதுமே ஜனாவிற்கு பொன் போட்டு கோபமாகப் பேசியிருக்கிறார்கள்.

ஆனால் ஜனாவோ  இங்கே நான் என்ன சொல்றேனோ அதுதான் நடக்கும். என்னை எதிர்க்கணும்னு நினைச்சா யாரும் கட்சியில் இருக்கவே மாட்டீங்க..’ என மிரட்டியிருக்கிறார் . இப்படிப் பல நிர்வாகிகளும் புகார்களுடன் இன்று வந்தாங்க. ஆனால், என்ன பிரயோஜனம்? எல்லா மனுக்களையும் அந்த ஜனாதான் வாங்குறாரு. அம்மா இருந்தபோது, பூங்குன்றன் புகார்களை வாங்கிவிட்டு அம்மா கவனத்துக்கே கொண்டுபோக மாட்டாரு. இப்போ அதே கதைதான் இங்கே நடக்குது. அம்மா இருந்த மாதிரி இப்போ தினா  இருக்காரு. அதே பூங்குன்றன் இடத்துல ஜனார்த்தனன் இருக்காரு. அம்மாகிட்ட பொறுமையாக இருந்த மாதிரியெல்லாம் தினகரன்கிட்ட யாரும் இருக்க மாட்டோம். பாதிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்று திரட்டி, மீடியா முன்பு அவங்க பண்ற அநியாயத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துடலாம்னு முடிவுக்கு வந்துள்ளார்களாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios