தமிழகத்தில் அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று எம்.பியாக இன்று பதவியேற்றுக் கொண்ட இல.கணேசன் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மாநிலங்களவை உறுப்பினராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன், இன்று பதவியேற்றுக் கொண்டார். மத்திய பிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில்
டெல்லி மேல் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நஜ்மா அப்துல்லா, மணிப்பூர் மாநில ஆளுநராக மத்திய அரசி நியமித்தது. இதனை அடுத்து, மேல்சபை
உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 

காலியாக இருந்த எம்.பி. பதவிக்கு புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன்
வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்க்ல செய்யாத நிலையில், இல. கணேசன் எம்.பியாக இன்று பதவியேற்றுக்
கொண்டார்.

எம்.பி.யாக பதவியேற்ற இல. கணேசன், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும்
என்று கூறினார். தமிழக மக்களின் நலனுக்காக எம்.பியாக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் அப்போது இல.கணேசன் தெரிவித்தார்.