Asianet News TamilAsianet News Tamil

Jai bhim: இதவிட காமெடி ஏதாவது இருக்குமா..? அன்புமணியை கலாய்த்து சூர்யாவுக்கு முட்டுக்கொடுக்கும் விசிக..!

நடிகர் சூர்யாவை சாதிவெறியர் என பூசுகிறார். அதுமட்டமல்ல, பழங்குடிகளுக்காக அவரது அய்யா போராட்டம் வேறு நடத்தினாராம்.

Jaibhim Anbumani kalaittu Surya props VCK
Author
Tamil Nadu, First Published Nov 10, 2021, 3:12 PM IST

ஜெய் பீம் திரைப்படம் குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவை சாதிவெறியர் என பூசுகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சித்துள்ளது. Jaibhim Anbumani kalaittu Surya props VCK

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை; ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறி இருந்தார். இது தொடர்பாக 9 வினாக்களை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதி அந்த வினாக்கள் அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். 

‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் கொடூர மனநிலையும், மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் போக்கும் கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது, உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தான் தமிழ்நாட்டில் வாழும்  மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை.Jaibhim Anbumani kalaittu Surya props VCK

‘ஜெய்பீம்’ திரைப்படம் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு பல ஐயங்கள் உள்ளன. இராஜாக்கண்ணுவை படுகொலை செய்த காவல் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும் கூட, கொலையான பழங்குடி இளைஞருக்கு இராஜாக்கண்ணு, அவருக்காக போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு, விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜிக்கு பெருமாள் சாமி என்று உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய தாங்களும், இயக்குனரும், சார்பு ஆய்வாளர்  பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்? நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?

காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட இராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இப்போது சென்னையில்  வாழ்ந்து வருகிறார். அவர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் தமது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஊராட்சித் தலைவரும், ஊர் மக்களும் தான் தமக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். அவ்வாறு இருக்கும் போது திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சித் தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்? Jaibhim Anbumani kalaittu Surya props VCK

கொடூர காவல் அதிகாரியாக நடித்திருப்பவர் வீட்டில் தொலைபேசும் காட்சியில்  வன்னியர்களின் புனிதச் சின்னமான அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி வைக்கப்பட்டிருந்தது ஏன்?

ஜெய்பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி.... அம்பேத்கரியத்துக்கு வெற்றி என்று பொருள். அம்பேத்கர் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்று கற்பிக்கவில்லை. ஆனால், ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள நீங்களும், உங்கள் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட, வன்னியர்களை இழிவுபடுத்துவதில் தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். இது தான் ஜெய்பீம் என்பதற்கு நீங்கள் அறிந்து கொண்ட பொருளா?’’ என கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘’ஜெய் பீம் திரைப்படம் குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில், நடிகர் சூர்யாவை சாதிவெறியர் என பூசுகிறார். அதுமட்டமல்ல, பழங்குடிகளுக்காக அவரது அய்யா போராட்டம் வேறு நடத்தினாராம். இதைவிட காமெடி ஏதாவது இருக்குமா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios