Asianet News TamilAsianet News Tamil

Jai Bhim: பா.ரஞ்சித் ராஜராஜ சோழனை தப்பா பேசியபோது.. எங்கோ போனார் பாரதிராஜா.? கழுவி ஊற்றிய உமா ஆனந்த்.

உண்மையிலேயே கோபிநாத் ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் அவரை ஒரு மாற்று சமூகத்தவரைப் போல் அவர் சித்தரித்தார். தற்போது ஜெய்பீம் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். 

Jai Bhim: When Pa. Ranjith insult Rajaraja Chola ..  where went Bharat Raja.? Uma Anand asking.
Author
Chennai, First Published Nov 23, 2021, 12:50 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சூர்யாவுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வரும் பாரதிராஜா, பா. ரஞ்சித் ராஜராஜ சோழனை இழிவுபடுத்திப் பேசிய போது எங்க போயிருந்தார் என இந்துக் கோயில்கள் மீட்பு இயக்கத்தின் மாநில செயலாளரும், அரசியல் விமர்சகருமான உமா ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இந்துக்களை பிரிப்பது யாருக்கு லாபம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், சூர்யா ஒருவேளை அந்நிய சக்திகளின் கைக்கூலியாக மாறிவிட்டாரோ என சந்தேகம் எழுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள படம் ஜெய்பீம், ஆண்டாண்டு காலமாக பழங்குடியின சமூகம் எப்படி சாதி வெறிக்கும் காவல் துறையின் அதிகார வெறிக்கும் இரையாக்கப்படுகிறது என்பதை  ரசம் மாறாமல் பதிவுசெய்துள்ளது ஜெய் பீம் திரைப்படம். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில்  போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் சாதி, மதம், இனம். மொழி கடந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது மக்களால் எந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறதோ அதே அளவுக்கு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சில காட்சிகள் வன்னியர் சமூகத்தை இழிவு படுத்தி விட்டது, இதனால் ஒட்டுமொத்த வன்னிய சமூகமும் காயப்பட்டு நிற்கிறது என பாமக, வன்னியர்  சங்கம் குரல் எழுப்பியுள்ளது. அந்த குறிப்பிட்ட செயலுக்கு படத்தின் கதாநாயகன் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அது வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். 

Jai Bhim: When Pa. Ranjith insult Rajaraja Chola ..  where went Bharat Raja.? Uma Anand asking.

இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மாறி மாறி இரு தரப்புக்கும் தங்களது ஆதரவுகளை வெளிபடுத்தி வருகின்றனர். நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் பா. ரஞ்சித், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் டி.ராஜேந்தர், நடிகர் சூரி, தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் என இன்னும் பலர்  ஆதரவை தெரிவித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் பாமகவுக்கு ஆதரவாகவும் சூர்யாவுக்கு எதிராகவும் இந்துக் கோயில் மீட்பு இயக்கத்தின் மாநில செயலாளர் மற்றும் அரசியல் விமர்சகருமான உமா ஆனந்த் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் நடிகர் சூர்யா அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய படங்களை எடுத்து வருகிறார். இதற்கு முன்பு அவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படம் கோபிநாத் வாழ்க்கையை கருப்பொருளாகக் கொண்டது என கூறினார்.

Jai Bhim: When Pa. Ranjith insult Rajaraja Chola ..  where went Bharat Raja.? Uma Anand asking.

உண்மையிலேயே கோபிநாத் ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் அவரை ஒரு மாற்று சமூகத்தவரைப் போல் அவர் சித்தரித்தார். தற்போது ஜெய்பீம் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். அதுவும் ஒரு உண்மை கதை என கூறினார், ஆனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை அதில் இழுவுபடுத்தியுள்ளார். தனது படங்களின் மூலம் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார், திட்டமிட்டு அவரும் அவரது குடும்பமும்  சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறது, அந்தோணிசாமி என்ற பெயருக்கு மாற்றாக குரு  என்று பெயர் வைத்திருக்கிறார்கள்,  இது வன்னியர்களை மட்டுமல்ல இந்துக்களை இழிவுபடுத்தும் செயல், இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இப்படிப்பட்ட நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா போன்றவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள்,  நடிகர் பாரதிராஜாவிடம் நான் ஒன்று கேட்கிறேன் பா. ரஞ்சித் என்ற இயக்குனர் ராஜராஜ சோழனை இழிவாக பேசிய போது நீங்கள் எங்கே போனீர்கள். உங்களுடைய தமிழ் தன்மானம் எங்கே போனது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Jai Bhim: When Pa. Ranjith insult Rajaraja Chola ..  where went Bharat Raja.? Uma Anand asking.

சூர்யா, பா.ரஞ்சித் போன்றவர்களெல்லாம் என்ன மாதிரியான படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பா. ரஞ்சித் ராஜராஜசோழன் இழிவாகப் பேசினார், ஜோதிகாவும் அதேபோல தான் பேசினார், ராஜராஜ சோழனை விட தமிழகத்திற்கு பெருமைமிகு அடையாளம் உண்டா? அவரை எப்படி அவமானப்படுத்தினார்கள், ராஜ ராஜ சோழனை கேவலமாக பேசினால் அது தமிழர்களை கேவலப்படுத்துவதற்கு சமம். அன்று பா ரஞ்சித் ராஜராஜனை அவமானப்படுத்திய போது எங்கே போய்விட்டார் இந்த பாரதிராஜா? தேவர் அய்யா இருந்திருந்தால் அதை சும்மா விட்டிருப்பாரா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios