Asianet News TamilAsianet News Tamil

Jai Bhim: திடீரென மகன் சூர்யாவோடு போய் முக்கிய தலைவரை சந்தித்த சிவக்குமார். மாஸ் சம்பவம்.

இப்படிப்பட்ட சமூக மாற்றத்தை ஏற்படுத்திய இத்திரைப்படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவை நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார், இயக்குனர் ஞானவேல் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர்.

Jai Bhim : Sivakumar who suddenly went with his son Surya and met the main leader. Mass incident.
Author
Chennai, First Published Nov 26, 2021, 3:33 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஜெய்ஹிந்த் பட விவகாரத்தில் அன்புமணி ராமதாசுக்கும் சூர்யாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது  நடிகர் சூர்யா அவரது தந்தை சிவகுமார் மற்றும் படத்தின் இயக்குனர் ஞானவேல் ஆகியோர்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு வைகோ சந்தித்து உள்ளனர். இதற்கான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Jai Bhim : Sivakumar who suddenly went with his son Surya and met the main leader. Mass incident.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. பாமகவினர் அவரை அச்சுறுத்தி வருவதால் சூர்யாவின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூர்யா எங்கு சென்றாலும் அவருடன் இரண்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு உடன் செல்கின்றனர். முன்னதாக அன்புமணிக்கு பதில் கடிதம் எழுதிய உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோருக்கு சூர்யா நன்றி கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் ஓயாது பாமக வன்னியர் சங்கம் அறிவித்துள்ளது. அதனையடுத்து ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்தப் படத்தைப் பற்றி எந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அது தன்னை மட்டுமே சாரும் என்றும், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா மீது எந்த தவறும் இல்லை என்றும் அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்பதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

Jai Bhim : Sivakumar who suddenly went with his son Surya and met the main leader. Mass incident.

அதேபோல் இந்த படத்தில் பாதிக்கப்பட்ட  பார்வதியிடம் முறையாக அனுமதி பெறாமல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த குறிப்பிட்ட பெண்ணின் வாழ்க்கையை வைத்து படம் எடுத்து கோடி கோடியாய் சம்பாதித்த சூர்யா, பார்வதிக்கு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை எனவும் அவர் மீது பாமகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதனையடுத்து பார்வதி அம்மாளுக்கு 15 லட்ச ரூபாயை நேரில் சந்தித்து வழங்கினார் சூர்யா, அதுமட்டுமின்றி இருளர் சமுதாய நலனுக்காக  ஏற்கனவே  அவர் ஒரு கோடி ரூபாயை தமிழக முதல்வரிடம் வழங்கியுள்ளார். இந்த திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக தமிழக முதல்வரே முன்வந்து பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் உள்ளிட்டவர்களை தாமதமின்றி அதிகாரிகளே நேரில் சென்று அம்மக்களுக்கு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பல ஆண்டுகளாக தங்களது உரிமைகளுக்காக அரசு அலுவகங்களுக்கு நடையாய் நடந்து அலுத்துப்போன அந்த அம்மக்களுக்கு இப்போது வீடு தேடி சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Jai Bhim : Sivakumar who suddenly went with his son Surya and met the main leader. Mass incident.

இப்படிப்பட்ட சமூக மாற்றத்தை ஏற்படுத்திய இத்திரைப்படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவை நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார், இயக்குனர் ஞானவேல் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்து தான் நெகிந்துபோனதாகவும், இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வர வேண்டுமென்றும், சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய இந்த திரைப்படத்தை எண்ணி மகிழ்வதாகவும் நல்லகண்ணு படக்குழுவினரிடம் கூறியுள்ளார். அப்போது நடிகர் சூர்யாவின் கரங்களைப் பிடித்து அவர் தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் வெளிப்படுத்தினார். அதேபோல் இயக்குனர் ஞானவேலின் கண்ணத்தை  தொட்டு அவருக்கு தனது பாராட்டையும் நல்லகண்ணு தெரிவித்தார். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios