Asianet News TamilAsianet News Tamil

Jai Bhim:சந்துரு ஒன்னுமே செய்யல.. இந்த சமூகத்தினர்தான் எங்களை பாதுகாத்தனர்.. இராசாக்கண்ணு மகன் பகீர்.!

அவர் எந்த உதவியும் எனக்கு செய்யவில்லை, ஆரம்பம் முதல் கடைசி வரை கோவிந்தன் தான் உடன் இருந்தார். கதிர்வேலு, ராஜேந்திரன், கோவிந்தன், சந்திரமோகன், சந்தனம், சுந்தரம், ராஜ்மோகன் ஆகியோர் தான் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். 

Jai Bhim: Chandru did nothing .. It was this community that protected us .. Rajakannu's son Shocking.!
Author
Chennai, First Published Dec 1, 2021, 11:24 AM IST

சந்துரு  எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை, எங்களை பாதுகாத்தது வன்னியர்கள் தான், படையாட்சிகள்தான் என ரியல் ஜெய்பீம் கதாநாயகி பார்வதியின் மகன் தெரிவித்துள்ளார். எங்களுக்காக ஆரம்பம் முதல் இறுதிவரை போராடியது கோவிந்தன் தான் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெய்பீம் திரைப்படத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவை பிரதானப்படுத்தி காட்சிகள் அமைந்துள்ள நிலையில், பார்வதியின் இரண்டாவது மகனின் இக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Jai Bhim: Chandru did nothing .. It was this community that protected us .. Rajakannu's son Shocking.!

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இது ஒரு புறமிருக்க பாதிக்கப்பட்ட பார்வதியிடம் அனுமதி பெறாமல் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினர் இப்படத்தை எடுத்துவிட்டனர். ஆனால் இதுவரை பார்வதிக்கு எந்த உதவியும் சூர்யா செய்யவில்லை என்று சர்ச்சை கிளப்பினர். இதனையடுத்து சூர்யா பாதிக்கப்பட்ட பார்வதியம்மாவை சந்தித்து  15 லட்சம் நிதி உதவி வழங்கினார். அதேபோல் இப்படத்தில் சூர்யா ஏற்று நடத்துள்ள சந்துரு கதாபாத்திரம் பேசுபொருளாக இருந்து வருகிறது. ஒய்வுபெற்ற நீதி நாயகம் சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது ராஜாகண்ணு மரணத்திற்கு வழக்குநடத்தி நீதி பெற்று தந்தார் என்பதுதான் அது. இந்நிலையில் பலரும் சந்துருவை பாராட்டி புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் 

Jai Bhim: Chandru did nothing .. It was this community that protected us .. Rajakannu's son Shocking.!

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள பார்வதி-ராசாகண்ணுவின் 2 வது மகன் நடிகர் சூர்யாவை எச்சரித்தும், நீதி பதி சந்துருவை தனக்கு ஒன்றுமை செய்யவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- எனக்கும் எனது குடும்பத்திற்கும் சூர்யா உதவி செய்ய வேண்டும் பண உதவி செய்ய வேண்டும்.. எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் அவர்  எதுவும் செய்யவில்லை என்றால் நான் முதல்வரிடம் சென்று மனு கொடுக்க உள்ளேன். சரத்குமார், விஜயகாந்த், அர்ஜுன் போன்ற நடிகர்கள் வீடுகளுக்குச் சென்று நான் புகார் தெரிவிப்பேன். என்னையும் என் குடும்பத்தையும் வைத்துதான் அவர்கள் படம் எடுத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்தான், எங்களுக்கு அவர் உதவி செய்ய வேண்டும், அவர் பணம் கொடுத்தால் நாங்கள் நிம்மதியாக இருப்போம். இல்லை என்றால் அவர் மீது நாங்கள் கேஸ் போடுவோம். அவருக்கு எதிராக பிரச்சினை செய்ய தயாராக இருக்கிறேன். ஏன்.? நீதிபதி இடமேகூட போவேன்.  எங்களுக்காக வழக்கு நடத்தியவர் சிதம்பரம் முத்துகிருஷ்ணன் ஆனால் இதில் சந்துரு எதுவுமே செய்யவில்லை.

அவர் எந்த உதவியும் எனக்கு செய்யவில்லை, ஆரம்பம் முதல் கடைசி வரை கோவிந்தன் தான் உடன் இருந்தார். கதிர்வேலு, ராஜேந்திரன், கோவிந்தன், சந்திரமோகன், சந்தனம், சுந்தரம், ராஜ்மோகன் ஆகியோர் தான் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். அவர்கள் எல்லாமே வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள், படையாட்சிகள்தான் எங்களுக்கு உதவி செய்தார்கள். சந்துரு எனக்கு எதுவுமே செய்யவில்லை என அவர் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Jai Bhim: Chandru did nothing .. It was this community that protected us .. Rajakannu's son Shocking.!

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையிலும் கொடூர வில்லனுக்கு வன்னியர் சங்க தலைவர் மறைந்த ஜெ. குருவின் பெயரை வைத்ததுடன் அக்னிசட்டி காலண்டர் மற்றும் பாமக கரைவெட்டி போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ள நிலையில், பழங்குடியினர் சமூகத்துக்கு எதிராக இருந்தவர்கள் வன்னியர்கள்தான் என்பது போன்ற ஒரு கருத்து ஜெய்பீம்  திரைப்படத்தில் கட்டமைக்கப்பட்டு இருப்பதாக அப்படக்குழு மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்களை பாதுகாத்தது வன்னியர்கள் தான், படையாட்சிகள் தான் என ராஜாக்கண்ணுவின் மகன் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios