Asianet News TamilAsianet News Tamil

Jai Bhim:சாதி அடிமைகளை உலுக்கிய படம்... சாதி வெறியர்கள் தூக்கம் கலைத்த படம்.. கௌதமனை நாறடித்த சுந்தரவல்லி.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. 

Jai Bhim: A film that rocked the caste slaves ... this movie distrubed asleep of caste fanatics   .. Sundaravalli who criticized Gautama.
Author
Chennai, First Published Nov 27, 2021, 4:05 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஜெய்பீம் சாதி அடிமைகளை உலுக்கி எடுத்த படம், சாதிவெறியர்களின் தூக்கம் கலைத்த படம், அதற்கு கௌதமனே சாட்சி என்று பேராசிரியை சுந்தரவல்லி விமர்சித்துள்ளார். ஜெய்பீம்  திரைப்படம் வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாகவும், அதற்கு சூரிய பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து இயக்குனர் வ. கௌதமன் வலியுறுத்தி வரும் நிலையில் சுந்தரவல்லி இவ்வாறு விமர்சித்துள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Jai Bhim: A film that rocked the caste slaves ... this movie distrubed asleep of caste fanatics   .. Sundaravalli who criticized Gautama.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கும்- பாமகவுக்கும் ஆதரவாக மாறிமாறி குரல்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், பாமகவுக்கு இணையாக தொடர்ந்து சூர்யாவை இயக்குனர் வ. கௌதமன் எச்சரித்து வருகிறார். 

Jai Bhim: A film that rocked the caste slaves ... this movie distrubed asleep of caste fanatics   .. Sundaravalli who criticized Gautama.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஜெய்பீம் திரைப்படத்தில் திட்டமிட்டே  வன்னிய மக்களை இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் எவனாக இருந்தாலும் அது எமனாக இருந்தாலும் விடமாட்டேன் என அவர் எச்சரித்துள்ளார். இதற்கு பலரும்  கவுதமுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ஜெய்பீம் திரைப்படம் குறித்தும் சூர்யாவுக்கு எதிராக பேசிவரும் வ.கௌதமன் குறித்தும் அரசியல் விமர்சகரும், இடதுசாரி சிந்தனையாளரும், பேராசிரியர் சந்தரவல்லி சமூக வலைதளத்தில் தனது கருத்தை காட்டமாக பதிவு செய்துள்ளார். 

 

 

அதாவது, ஜெய்பீம் திரைப்படத்தை எதிர்ப்பவர்கள் சாதியவாதிகளாகவும், மதவாதிகளாவும் இருக்கிறார்கள். சீமானும் அதே மனநிலைதான் ராமதாசுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார். இடை சாதிப் பெருமையை பேசுகிற திமிரை கொண்டாடக் கூடிய கூட்டங்கள்  கைகோர்த்து கட்டிப்பிடித்து ஜெய்பீமை எதிர்க்கின்றன. அதனால் தான் அண்ணனை காப்பாற்று ஐயாவை காப்பாற்று என சீமான் பேசுகிறார். ஜெய்பீம் திரைப்படத்திற்காக கொந்தளித்து வரும் அன்புமணி ராமதாஸ் ஏன் ருத்ரதாண்டவம் படம் பார்க்கவில்லையா? திரௌபதி படத்தை பார்க்க வில்லையா? ஒடுக்கப்பட்ட ,தலித் மக்களினுடைய குரலாக, பொது நீரோட்டத்தில் உழைத்துக் கொண்டிருக்கிற ஒரு தலைவரை திட்டமிட்டு அவமானகரமான, ஒரு போலியான பிம்பத்தை கட்டமைத்த படங்களை கண்டிக்காத அன்புமணி, ஒரு சிறிய காலண்டரை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Jai Bhim: A film that rocked the caste slaves ... this movie distrubed asleep of caste fanatics   .. Sundaravalli who criticized Gautama.

மேலும் சூர்யா இதுபோன்ற படங்களை நிறைய எடுக்க வேண்டுமென அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக தொடர்ந்து மிரட்டல் தொனியில் பேசி வரும் இயக்குனர் வ. கௌதமனை விமர்சித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், ஜெய்பீம் சாதி அடிமைகளை உலுக்கி எடுத்த படம்... சாதி வெறியர்கள் தூக்கம் கலைத்த படம்... கௌதமனே சாட்சி.. என அவர் பதிவிட்டுள்ளார் இதை பலரும் பல வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios