Asianet News TamilAsianet News Tamil

Jai Bhem: அன்று மாமா.. இன்று மச்சான்.. நடிகர் சூர்யாவை எச்சரித்த காடுவெட்டி குரு மகன்.

நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் ஜெய்பீம், ஹாலிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. வஞ்சிக்கப்பட்ட ஒரு பழங்குடியின  சமூகம் அரசு பயங்கரவாதத்தால் எந்த அளவிற்கு கொடுமைகளை சந்திக்கிறது என்பதை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது

Jai Bhem: Actor Suryave change your self. you could't  come from house  .. kaduvetti guru son warn.
Author
Chennai, First Published Nov 13, 2021, 11:22 AM IST

தொடர்ந்து எங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல்ராஜா வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழல் உருவாகும் என்றும், நடிகர் சூர்யா தன் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் காடுவெட்டி குரு மகன் கனலரசன் எச்சரித்துள்ளார். நடிகர் சூர்யா சமூகத்தை இழிவுபடுத்தும் படங்களில் நடித்தால் அவரது ரசிகர்களே அவரை வெறுக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் ஜெய்பீம், ஹாலிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. வஞ்சிக்கப்பட்ட ஒரு பழங்குடியின  சமூகம் அரசு பயங்கரவாதத்தால் எந்த அளவிற்கு கொடுமைகளை சந்திக்கிறது என்பதை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த படம், இந்த படம் விருதாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993 ஆம் ஆண்டு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின் சடலமாக மீட்கப்பட்டார். அந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு ஜெய் பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Jai Bhem: Actor Suryave change your self. you could't  come from house  .. kaduvetti guru son warn.

இருளர் சமுதாய மக்கள் தங்களின் வாழ்க்கையில் சந்திக்கும் கொடுமைகளை தத்ரூபமாக படம் பிடித்தேன் காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இதில் ராஜகண்ணுவை சிறையில் அடித்து கொலை செய்ததாக தண்டிக்கப்பட்ட காவலரின் பெயர் அந்தோணிராஜ், ஆனால் அந்தோணிராஜ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள போலீஸ்காரருக்கு திரைப்படத்தில் பெயர் குருமூர்த்தி என வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது வீட்டில் அவர் அமர்ந்திருக்கும் போது அவருக்குப் பின்னால் நாட்காட்டியில் வன்னியர்களின் அடையாளமான  அக்னி கலசம் இடம்பெற்றுள்ளது. அப்படி என்றால்  மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை குறிக்கும் வகையில் இது எடுக்கப்பட்டத.? என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் இந்த படத்தையும், நடிகர் சூர்யாவையும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் 3 கோடி வன்னிய மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் நடமாட முடியாது நிலை ஏற்படும் என எச்சரித்திருந்தார். 

Jai Bhem: Actor Suryave change your self. you could't  come from house  .. kaduvetti guru son warn.

இந்நிலையில் காடுவெட்டி குருவின்  மகனும்,  மாவீரன் மஞ்சள் படை என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் கனலரசன் ஒரு செய்தி ஊடகத்திற்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் நடிகர் சூர்யா தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்தக்கூடிய படங்களில் நடித்தால், அவரது ரசிகர்களே அவரை மதிக்காத சூழல் உருவாகும் என எச்சரித்துள்ளார். தொடர்ந்து பேசியவர், ஜெய்பீம் திரைப்படத்தை பொறுத்தவரையில் அது ஒரு நல்ல திரைப்படம் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அந்தோணிசாமி கேரக்டருக்கு குருமூர்த்தி என்ற பெயர் சூட்டியிருப்பது ஏன் என்பதுதான் எங்கள் கேள்வி. மொத்தத்தில் இரண்டு சாதிகளுக்கும் இடையே பகையை உருவாக்கம் முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பை போல இரண்டு சாதியினரும் மோதிக் கொண்டிருக்க மாட்டோம், சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்போம், இந்த படத்தில் சூர்யா வெறும் நடிகர் என்பதால் அவர் மீது மட்டும் முழு தவறையும் கூற முடியாது.

Jai Bhem: Actor Suryave change your self. you could't  come from house  .. kaduvetti guru son warn.

அந்தப் படத்தின் இயக்குனர்தான்  இதற்கு பொறுப்பாவார், சூர்யா நிறைய நல்லது செய்கிறார்கள், நிறைய பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அதனால் அவரை நல்ல மனிதராக நான் பார்க்கிறேன். சூர்யாவுக்கு நான் இதை எச்சரிக்கையாக சொல்லவில்லை, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்கி எடுக்கப்பட்டுள்ள இந்த போன்ற படங்களில் நடித்தால் அவர் மீது மக்கள் வைத்துள்ள மரியாதை குறையும், இது நடிகர் சூர்யா சிந்தித்துப் பார்க்கவேண்டும். தனது தவறை அவர் திருத்திக் கொள்வார் என நம்புகிறேன். இல்லையென்றால் அவரது ரசிகர்களே அவரை மன்னிக்க மாட்டார்கள், சூர்யா இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவர் வணிகரீதியாக இதை பார்த்திருப்பார். நான் முழுக்க முழுக்க அந்த படத்தின் இயக்குனர் ஞானவேலைதான் குற்றம் சாட்டுகிறேன். உண்மையில் அந்த உதவி ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என இருப்பதால் அந்தப் பெயரை வைக்க அவர் பயந்திருக்கிறார். அதற்காக அது குரு மூர்த்தி என பெயர் வைத்திருக்கிறார். ஜெய்பீம் திரைப்படத்தில் ஏன் குருமூர்த்தி என்ற பெயரை அவர் கொண்டுவந்தார் என்பதே எங்கள் கேள்வி. எல்லா நேரத்திலும் இது போன்ற செயல்களை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், ஒருகட்டத்தில் அவர் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios