Asianet News TamilAsianet News Tamil

ஆந்திராவில் 4 லட்சம் இளைஞர்களுக்கு ஒரே நாளில் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் ! ஜெகன் மோகனின் ஸ்வீட் ஷாக் !!

ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலின்போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என ஜெகன் மோகன் கொடுத்த  வாக்குறுதியின்படி வரும் காந்தி ஜெயந்தியன்று 4 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியனம ஆணை வழங்கவுள்ளார்.
 

Jagan Mohan will give 4 lakhs appointmtnt order
Author
Vijayawada, First Published Jul 23, 2019, 7:30 AM IST

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். 

தேர்தலின் போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.  தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி,  ஒரே நேரத்தில் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. 

Jagan Mohan will give 4 lakhs appointmtnt order

அதன்படி  கிராமங்களில் வாழும் 4000 பேருக்கு ஒரு கிராம தலைமை செயல் அமைக்கப்படும். அந்த கிராமங்களில் 50 வீட்டுக்கு ஒரு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் அந்த மக்களுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை அந்தந்த துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் மாநிலம் முழுவதும் கிராமங்களில் அரசு சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு வரை படித்து தகுதித் தேர்வு எழுதியோருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. 

Jagan Mohan will give 4 lakhs appointmtnt order

அவர்களுக்கு சம்பளம் மாதம் 5,000 வழங்கப்படவுள்ளது. நகரங்களில் அமைக்கப்படும் நகர தலைமைச் செயலகத்தில் பணி புரியும் தன்னார்வலர்களுக்கு 15000 சம்பளம் வழங்கப்பட உள்ளது. 

கிராம, நகர தன்னார்வலர்களை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு காந்தி ஜெயந்தி அன்று முதல் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. 

Jagan Mohan will give 4 lakhs appointmtnt order

மக்கள் நலம் பெற நேர்மையான நிர்வாகம் நடைபெற வேண்டும். இதை உறுதி செய்ய வாக்குறுதியை நிறைவேற்றுவும் எனது தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபடும் என்று ஜெகன்மோகன் ரெட்டி இது குறித்து தகவல் வெசளியிட்டுள்ளார்.

ஜெகன் மோகனின் இந்த அதிரடி நடவடிக்கையால் இளைஞர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios