தமிழ்நாட்டில் தான் கூறும் திட்டங்களை ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்தி வருகிறார் என நாம் தமிழர் கட்சியுன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில், முக்கிய திட்டங்களான ஒன்று ஆந்திர காவல் துறைக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்கும் திட்டம். அதன்படி விடுமுறை திட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நாங்குநேரியில் அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான், இங்கே நான் சொல்லும் திட்டங்களை எல்லாம் அங்கே ஜெகன் மோகன் ரெட்டி அமல்படுத்திக்கொண்டே இருக்கிறார். அரசியல் ரீதியாக, ஜெகன் மோகன் தான் பெற்ற வெற்றிக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று தன் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார்.

மேலும், பேசிய அவர் ஆந்திர முதல்வர் எனது புத்தகத்தை வைத்திருப்பார் என நினைக்கிறேன். நான் சொன்னது போல் ஜெகன்மோகன் ரெட்டி காவலர்களுக்கு விடுமுறை கொடுத்துள்ளார். நான் இங்கு சொல்லும் யோசனைகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிதான் செயல்படுத்துகிறார் என்றார்.