கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை. மாஸ்டர் படத்தை பார்க்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்கிற ரேஞ்சில் நெட்டிசன்கள் இந்த விஷயத்தை வைத்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.லோகேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவிருந்த மாஸ்டர் பட ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் காரணமாக தள்ளி கொண்டே போனது.எனவே படத்தை 2021 பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார் நடிகர் விஜய்.இந்த சந்திப்பில் தியேட்டர்களில் தற்போது 50 சதவீதமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதை, 100 சதவீதமாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளாராம். இவர்களுடன் அமைச்சர் வேலுமணியும் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் சமூகவலைதளமான ட்விட்டர் பக்கத்தில், #எடப்பாடிகாலில்விழுந்தவிஜய் என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதில் கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை. மாஸ்டர் படத்தை பார்க்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்கிற ரேஞ்சில் நெட்டிசன்கள் இந்த விஷயத்தை வைத்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.