ஆளுநருக்கு எதிராக பேசினால் அது ஸ்டாலினுக்கு தான் ஆபத்து... எச்சரிக்கை விடுத்த ஹெச்.ராஜா!!

ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளோ, திமுக அமைச்சர்களோ பேசினால், அது ஸ்டாலினுக்கு தான் ஆபத்தாக முடியும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

its danger for cm stalin if he speak against the governor says h raja

ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளோ, திமுக அமைச்சர்களோ பேசினால், அது ஸ்டாலினுக்கு தான் ஆபத்தாக முடியும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் பேசியது தவறு என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே. முதுகெலும்பு தைரியம் உள்ளவர்கள், ஆம்பிள்ளையானவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி கட்சிகளோ, திமுக அமைச்சர்களோ பேசினால், அது ஸ்டாலினுக்கு தான் ஆபத்தாக முடியும். இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்று விரும்பும் திமுக கூட்டணி கட்சிகள், இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்தால் நல்லது. தீர்மானத்திற்கு எதிராக மரியாதை இல்லை என்ற தீர்மானத்தை இன்றைக்கு சட்ட சபையில் திமுக கொண்டு வந்துள்ளது. இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால், நாளை ஆளுநர் இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டால் முதல்வர் என்ன செய்வார். அதானி விவகாரத்தில் எந்தவித முறைகேடுகளும் அரசுக்கு எந்த விதமான இழப்பும் நடக்கவில்லை.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து... கண்டன பொதுக்கூட்டமாக நடத்த திமுக கூட்டணி முடிவு!!

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு எதிராக இரண்டு நாட்கள் காங்கிரஸ் பங்கு பெறாமல் முடக்கியது. அதன் பிறகு இரண்டு நாட்களில் காங்கிரஸ் வாயை மூடிக்கொண்டு பாராளுமன்றத்தில் கலந்து கொண்டது. இந்த இரண்டு நாளில் நடந்தது என்ன..? காங்கிரஸ் மனம் மாறியது, அதை மாற்றியவர் யாரோ..? கர்நாடகா தேர்தலுக்காக இணை பொறுப்பில் அண்ணாமலை இருப்பதால் அங்கு முக்கியமான கூட்டம் ஒன்று டெல்லியில் வேட்பாளரை தேர்வு செய்வதில் நடந்து வருகின்றது. அதனால் தான் பிரதமர் மோடி பங்குபெற்ற தற்போதைய விஜயத்தில் அண்ணாமலை பங்கு பெற முடியவில்லை. இந்த விஷயம் மூத்த பாஜக நிர்வாகிகளுக்கு அனைவருக்கும் தெரியும். இந்த முறை அண்ணாமலை பிரதமரோடு இல்லாததற்கு ஒரு அசாதாரணமான சூழ்நிலை. அதனால்தான் அவர் பங்கு பெறவில்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொளுத்தி போடுவதற்கு வேறு எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் அறியாமை காரணமாக பல்வேறு விதமான கருத்துக்களை பலர் வெளியிட்டு வருகின்றனர். நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மத்திய அமைச்சர் தமிழகத்தில் மூன்று இடங்களும் ரத்து செய்யப்படுகிறது என்று யாருக்கு தகவல் கொடுத்தார். அண்ணாமலைக்கு மட்டுமே அவர் தகவல் கொடுத்தார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்த அழுத்தம்.. ஒருவழியாக ஒப்புதல் கொடுத்த ஆளுநர்..சாதித்த முதல்வர் - என்ன தான் நடந்தது.?

அவர் வெளியிட்ட அறிக்கையால் தான் அது வெளியே தெரிந்தது. மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அண்ணாமலை கேட்டதால் தான் மத்திய அமைச்சர் நிலக்கரி சுரங்க அனுமதியை ரத்து செய்தார். அதிமுக – பாஜக உறவு நன்றாக உள்ளது. இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரிடமும் பாஜக பேலன்ஸ் பண்ணி தான் நடந்து வருகிறது. ஒன்றுபட்ட அதிமுக இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று பாஜக கூட்டணி கட்சி என்ற முறையில் அறிவுறுத்தியது. ஆனால் இது அவர்கள் முடிவு. இந்த விஷயத்தில் பாஜக தலையீடு கிடையாது. கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை நாடாளுமன்ற மக்களுக்கு மறந்து விட்டது. அண்ணாமலைக்கு உறுதுணையாக நான் மத்த வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக, தேர்தலில் விலகி இருப்பதாக தான் கூறினேனே தவிர, தேர்தல் அரசியலில் இருந்து சன்னியாசம் வாங்கி விட்டதாக கருத வேண்டாம். இந்துக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக நான் கண்டிப்பாக அரசியலில் தொடர்வேன். ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார். அதன் பிறகு ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios