Asianet News TamilAsianet News Tamil

பதவிக்கு வந்து ஒரு வாரம்தான் ஆச்சு.. போகப்போக பாருங்க.. அசால்டு செய்த மேயர் பிரியா

15 மண்டலத்தில் மாதம் ஒருமுறை மண்டலத்துக்கு ஒரு வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.மேயராக பதவி ஏற்று ஒரு வார காலம் தான் நிறைவடைந்துள்ளது 

Its been a week since I came to power .. Let's see .. Mayor Priya hope.
Author
Chennai, First Published Mar 11, 2022, 12:12 PM IST

15 மண்டலத்தில் மாதம் ஒருமுறை மண்டலத்துக்கு ஒரு வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.மேயராக பதவி ஏற்று ஒரு வார காலம் தான் நிறைவடைந்துள்ளது வருங்காலங்களில் பல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்று சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 பெண்களை மேயர்களாம நியமித்து உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு என்ற திட்டத்தை ஸ்டாலின் நடைமுறைப்படுத்தியுள்ளார். அதேபோல் 323 ஆண்டுகால சென்னை மாநகராட்சிக்கு முதல் முறையாக தலித் பெண் மேயரை தேர்வு செய்து இந்த அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கு துணை நிற்கும் அரசு என்பதை ஸ்டாலின் பறைசாற்றியுள்ளார்.

இதையும் படியுங்கள்: " மக்கள்தான் எஜமானர்கள் மறந்துடாதீங்க".. அரங்கத்தை அதிரவைத்த ஸ்டாலின்.. ஆடிப்போன அதிகாரிகள்.

அந்த வகையில் சென்னை மேயராக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரி பிரியா மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ளார். மேயரானது முதல் அவர் மாநகராட்சிகளின் சுற்றிச் சுழன்று பணியாற்ற தொடங்கியுள்ளார். அந்த வகையில்  இன்று சென்னையில் வருமுன் காப்போம் முகாமை அவர் தொடர்கி வைத்துள்ளார். அதாவது, தமிழகத்தில் கொரொனா பாதிப்பு காலத்தில் தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருமுன் காப்போம் என்ற திட்டத்தை மீண்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் துவக்கி வைத்தார்.

Its been a week since I came to power .. Let's see .. Mayor Priya hope.

இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள 385 வட்டங்களிலும், வட்டத்துக்கு 3 மருத்துவ முகாம்கள் வீதமும், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், ஒரு மாநகராட்சிக்குத் தலா 4 மருத்துவ முகாம்கள் வீதமும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தலா ஒரு மருத்துவ முகாம் வீதம்  மொத்தம் 1,250 மருத்துவ முகாம்கள் நடத்திடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.அந்த அடிப்பையில் தற்போது வருமுன் காப்போம் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னையில் இரண்டு முகாம்கள் நடைபெற்றிருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சென்னை தரமணியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் இன்று வருமுன் காப்போம் முகாமை சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வருமுன் காப்போம் திட்ட முகாமில் பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது, மக்கள் முன்வந்து இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் 15 மண்டலங்களில் மாதம் ஒருமுறை மண்டலத்திற்கு வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த முகாமில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குழந்தை நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை, கண், பல் மருத்துவர், தோல் நோய் மருத்துவர் உள்ளிட்ட 16 சிறப்பு மருத்துவர்களால் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Its been a week since I came to power .. Let's see .. Mayor Priya hope.

இதையும் படியுங்கள்: கேப்டன பாக்கவிட மாட்டேங்கிறாங்க.. விஜயகாந்த் போட்டோவை பார்த்து குலுங்கி குலுங்கி அழும் ராதாரவி.

அதேபோல, தமிழக அரசு சார்பில் இந்த முகாமில் கர்ப்ப கால ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகள் தடுப்பூசி, தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், சமூகத்தில் தொற்றா நோய்கள் குறித்த கண்காட்சி, டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் 15 மண்டலத்தில் மாதம் ஒருமுறை மண்டலத்துக்கு ஒரு வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், மேயராக பதவி ஏற்று ஒரு வார காலம் தான் நிறைவடைந்துள்ளது வருங்காலங்களில் பல திட்டங்கள் கொண்டு வரப்படும்  என அதிரடி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios