Asianet News TamilAsianet News Tamil

திமுக அமைச்சர்களை பொடி ஆழ்வாருடன் ஒப்பிடலாமா.. ஆழ்வார்க்கு இழிவு.. எடப்பாடியாரை எகிறி அடித்த ராமரவிக்குமார்.

திமுக அமைச்சர்களை விமர்சிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  பொடியாழ்வாரின் பெயரை பயன்படுத்தலாமா, இது ஆழ்வாரையே அசிங்கப்படுத்தும் செயல் என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராமரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

It was wrong to use Edappadi Palanichami Podiyazhwar's name to criticize DMK ministers: Hindu Tamil Party
Author
First Published Oct 12, 2022, 1:41 PM IST

திமுக அமைச்சர்களை விமர்சிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  பொடியாழ்வாரின் பெயரை பயன்படுத்தலாமா, இது ஆழ்வாரையே அசிங்கப்படுத்தும் செயல் என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராமரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழக முதலமைச்சரையும் தமிழக அரசையும் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில்,  " தறிகெட்டு ஓடும் குதிரைகள் போல அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்கள்.

இந்நிலையில் திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார் என்று நான் சொன்னபோது, அவரது ' தொண்டரடிப்பொடியாழ்வார்' களுக்கு கோபம் கொப்பளித்தது.  ஆனால் இப்போது அவரே தன்னால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று  புலம்பியதை இந்த நாடு வேடிக்கை பார்த்தது"  எனக் குறிப்பிட்டு இருந்தார்.

It was wrong to use Edappadi Palanichami Podiyazhwar's name to criticize DMK ministers: Hindu Tamil Party

இந்நிலையில் திமுக அமைச்சர்களை குறிப்பிடும்போது தொண்டரடிப்பொடியாழ்வார் என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் பயன்படுத்தியுள்ளதற்கு இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் காட்டமாக  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு அதிமுக கட்சி இடைக்கால பொதுசெயலாளர்- முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதையும் படியுங்கள்:  ஆட்டை கடித்து, மாட்டை கடித்து ஆளைகடிக்கும் அண்ணாமலை... நம்மவரை அமெரிக்காவில் அசிங்கப்படுத்துவியா. மநீம.

தமிழக அரசு மற்றும் முதலமைச்சர். திருமு.க.ஸ்டாலின் திமுகவினரை, அரசு நிர்வாகத்தை விமர்சிக்க முழு உரிமைகள் இருக்கிறது. ஆனால் எடப்பாடியார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொண்டரடி பொடியாழ்வார் என்கின்ற ஸ்ரீ வைணவ மத ஆழ்வாரை- பெரியவரை உதாரணப்படுத்தி பேசுவது கண்டனத்திற்குரியது தேவையற்றது. மாண்புடைய முன்னாள் முதலமைச்சருக்கு இது மாண்பு அல்ல. தொண்டரடிப்பொடியாழ்வார் (Thondaradippodi Alvar) வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் ஆவார். ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பத்தாவதாக வரும் இவருக்கு 'விப்ர நாராயணர்' என்பது இயற்பெயர் ஆகும்.

It was wrong to use Edappadi Palanichami Podiyazhwar's name to criticize DMK ministers: Hindu Tamil Party

திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையைத் தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டு செய்து வந்தார். ஆழ்வார்களின் வசனங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று போற்றப்படுகிறது. இந்தப் பிரபந்தம் ஓதப்படும் 108 வைணவ கோயில்கள் திவ்ய தேசம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.அவரது படைப்புகளில் திருப்பள்ளி எழுச்சி பத்து வசனங்களைக் கொண்டதாகவும், திருமாலை நாற்பது வசனங்களைக் கொண்டதாகவும் உள்ளது.

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ்ஆ..? ஆர்.பி.உதயகுமாரா..? காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி..! சபாநாயகர் முடிவு என்ன..?

இவை இரண்டும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள 4000 சரணங்களில் கணக்கிடப்பட்டுள்ளன. தொண்டரடிப்பொடி மற்றும் பிற ஆழ்வார்களின் படைப்புகள் வைணவத்தின் தத்துவ மற்றும் இறையியல் கருத்துகளுக்குப் பங்களித்தன.  மூன்று சைவ நாயன்மர்களுடன் சேர்ந்து, அவர்கள் தென்னிந்திய பிராந்தியத்தின் ஆளும் பல்லவ மன்னர்களைப் பாதித்தனர். இதன் விளைவாகத் தென்னிந்தியாவில் பௌத்தம் மற்றும் சமண மதத்தை வளரவிடாமல் தடுத்தனர் என்பது வரலாறாக உள்ளது. மேலும், இந்து மதத்தின் இரு பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் தோன்றக் காரணமாக விளங்கினர்.

It was wrong to use Edappadi Palanichami Podiyazhwar's name to criticize DMK ministers: Hindu Tamil Party

தென்னிந்திய விஷ்ணு கோயில்களில், தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தொடர்புடைய படங்களும் பண்டிகைகளும் உள்ளன. வசந்த உத்ஸவம் திருவிழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது, மேலும் அவர் பராமரித்ததாக நம்பப்படும் தோட்டத்தில் ஒன்பது நாட்கள் தொண்டரடிப்பொடி மற்றும் பிற ஆழ்வார்களின் வசனங்கள் தினசரி பிரார்த்தனையின் ஒரு பகுதியாகவும், தென்னிந்தியாவின் பெரும்பாலான விஷ்ணு கோவில்களில் பண்டிகை சந்தர்ப்பங்களிலும் ஓதப்படுகின்றன. இவ்வாறு ராமரவிக்குமார் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios