ஸ்டாலின் வீட்டிற்கே அதிமுக அரசுதான் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுத்துள்ளது.2 ஜி அலைக்கற்றை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அதில் பலர் சிக்க இருக்கிறார்கள். திமுக கொள்ளையடிப்பதை கலையாக கொண்டுள்ளது என திமுக மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.


 
மதுரையில் அதிமுகவின் 49 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு 
 செய்தியாளர்களை சந்தித்தார்., “நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் ஆணித்தரமாக அதிமுக அரசு இருக்கிறது. இதுவே திமுக அரசாக இருந்தால் நழுவி கொண்டு சென்றிருக்கும். மத்திய அரசுக்கு இணையான மாநில அரசின் பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எங்களுக்கு போட்டி திமுக மட்டுமே, கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு எதிரிகள் இல்லை. பாரத பிரதமரின் நல்ல செயல்பாடுகளுடன், எங்களோட கூட்டணிக் கட்சி செயல்படுகிறது, அவர்களின் செயல்பாடு எங்களுக்கு பிடித்துள்ளது.


சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மகன் மட்டும் தற்போது சிக்கியுள்ளார். இன்னும் பலர் சிக்க வேண்டியுள்ளது திமுகவினர் இந்தி எதிர்ப்பது போன்ற நாடகமாடுகிறார்கள், அவர்கள் வைத்துள்ள பள்ளியில் ஹிந்தி பாடம் நடத்துகிறார்கள். 2 ஜி அலைக்கற்றை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அதில் பலர் சிக்க இருக்கிறார்கள். திமுக கொள்ளையடிப்பதை கலையாக கொண்டுள்ளது. ஊழலுக்கு பெயர் பெற்ற கட்சி திமுக. திமுக ஆட்சியில் தான் தமிழகம் இருண்ட மாநிலமாக இருந்தது. தற்போது மின்மிகை மாநிலமாக உள்ளது. ஸ்டாலின் வீட்டிற்கே அதிமுக அரசுதான் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுத்துள்ளது.” எனக் கூறினார்.