துரைமுருகனின் வீட்டில் ரெய்டு! திருமாவளவனுக்கு நெருக்கமானவர்களின் காரில் ரெய்டு...என்று தி.மு.க. கூட்டணியை திணறடிக்கிறது வருமானவரித்துறையின் உதவியுடன் தேர்தல் கமிஷன். ஆனால் அந்த தேர்தல் கமிஷனையே வெச்சு செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டாலின்! என்கிறார்கள் அவருக்கு நெருங்கிய வட்டத்தினர்.
துரைமுருகனின் வீட்டில் ரெய்டு! திருமாவளவனுக்கு நெருக்கமானவர்களின் காரில் ரெய்டு...என்று தி.மு.க. கூட்டணியை திணறடிக்கிறது வருமானவரித்துறையின் உதவியுடன் தேர்தல் கமிஷன். ஆனால் அந்த தேர்தல் கமிஷனையே வெச்சு செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டாலின்! என்கிறார்கள் அவருக்கு நெருங்கிய வட்டத்தினர்.
அவர்கள் தரும் விவரிப்புகள்...”ரெய்டில் சிக்கப்போகும் அடுத்த தி.மு.க. புள்ளி யார்? யார்? என்று கிளப்பப்படும் பரபரப்புகளுக்கு பயந்தும், வதந்திகளை கண்டு விரக்தியாக வேண்டாம்! துணிந்து இறங்கியடிப்போம்...என்று வெளுத்துக் கட்ட துவங்கிவிட்டார் ஸ்டாலின். துரைமுருகன் வீட்டு சம்பவத்துக்குப் பின் ராகுலும், ஸ்டாலினும் தீவிர ஆலோசனை நடத்தினார்களாம். அப்போது ‘சர்வேக்கள் நமக்கு சாதகமாதான் இருக்குது. அதனால தைரியமா சவால் விட்டு பேசுவோம் பொதுகூட்டங்களில். நாம பயந்து கிடந்தால், இன்னும் ஏறி ஏறி அமுக்க ட்ரை பண்ணுவாங்க.’ அப்படின்னு ராகுல் சொல்லியிருக்கார். இதைத்தொடர்ந்துதான் ஸ்டாலினும் வெளுத்துக் கட்ட துவங்கிட்டார். 
திருப்பூர்ல நடந்த கூட்டத்தில் ’இந்திய தேர்தல் ஆணையம் இன்று சுதந்திரமாக செயல்படுகிறதா? எனும் சந்தேகம் எழுகிறது, வலுக்கிறது. நியாயப்படி தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும், தேர்தல் ஆணையம் திட்டமிட்டே மூன்று தொகுதி இடைத்தேர்தலி நிறுத்தி வைக்கிறது.
தேர்தல் கமிஷன் நடுநிலையோடு செயல்படவில்லை. மோடிக்கு துணைபோகிறது. இப்படி ஒரு தலைப்பட்சமாக அவர்களுக்கு துணை போனால், பின்னாளில் வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இப்படி பேசுவதால் நான் மிரட்டுகிறேன் என்று நினைக்கலாம். இது மிரட்டலில்லை, ஜனநாயகத்தின் அடிப்படையில் இதை சொல்கிறேன். சோதனை எனும் பெயரில் தி.மு.க. தரப்பினரின் வீடுகளில் சதி செய்கிறார்கள். 
துரைமுருகன் வீட்டில் முதல் நாள் ரெய்டு நடந்தபோது எந்தப் பணமும் சிக்கவில்லை. இந்த கோபத்தில், அடுத்த முறை எங்கோ யாருடைய வீட்டிலோ பறிமுதல் செய்த பணத்தை அங்கே கொண்டு வைத்து, துரைமுருகன் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக கூறி டேமேஜ் செய்யப்பார்க்கிறார்கள். வேலூர் தொகுதி தேர்தலையும், ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்தலையும் தள்ளி வைக்க சதி செய்கிறார்கள். 
இதற்கு ஒரே காரணம், அங்கே தி.மு.க. வெற்றி பெறும் நிலையில் இருப்பதுதான். ஆனால் இந்த பூச்சாண்டிகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்.’ அப்படின்னு முழங்கினார். தேர்தல் கமிஷன் நடு நிலையாக நடக்கலைன்னு மக்களுக்கும் புரியுது, அவர்களை ஸ்டாலின் சவால் விட்டு பேசுவதை மக்கள் ரசிக்கிறாங்க. ஆனால், துரைமுருகனை ஏதோ நல்லவராக ஸ்டாலின் சித்தரிப்பதை மக்களே விரும்பவில்லை.” என்று முடித்தார்கள். ஆக! இன்றைக்கு, இப்படியாக செல்கிறது ஸ்டாலினின் அரசியல்.....
