it raid in r.k.nagar
ஜெயலலிதா மறைவையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 அம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சசிசலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும்,ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் மருகு கணேஷ் களம் இறங்கியுள்ளார்.
இதனிடையே டி.டி.வி.திமனகரன் சார்பில் வாக்காளர்களுக்கு குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும், தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் ஓட்டுக்காக பண பட்டுவாடா நடைபெறுவதாகவும் தேர்தல் ஆணையத்தில் திமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் தொப்பி அணிந்த ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது போலீசாரால் கைத செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆர்,கே.நகரில் உள்ள டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நள்ளிரவில் ராமச்சந்திரனனின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறையினர் ,தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறையின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அந்த வீட்டில் இருந்து பணம் உட்பட எந்தப் பொருளும் கைப்பற்றப்படவிலை என கூறப்படுகிறது. இந்த திடீர் ரெய்டு ஆர்.கே.நகர் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
