மக்கள் சுய கட்டுப்பாட்டோடு இருந்தால்தான் கொரோனா நோய் பரவலை தடுக்க முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் கந்தம்பட்டி பகுதியில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம், புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.8.38 மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.76.91 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை. முதலீட்டாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டோடு இருந்தால்தான் கொரோனா நோய் பரவலை தடுக்க முடியும். நோய் பரவலை தடுக்க பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் முதல்வர் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தவே பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு நோய் தொற்று இருந்தால் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. கடலில் வீணாக கலக்கும் உபரிநீரை பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.