It is said that 20 more MLAs will leave soon

ஆளும் எடப்பாடி அரசில் அழிக்க முடியாத, அதிரவைத்த வார்த்தை என்றால் அது “ஸ்லீப்பர் செல்” ஒட்டு மொத்த தமிழகமே ஆவலோடு எதிர்பாக்கும் அந்த சூழல் எப்போது வரும் அதாவது, எடப்பாடி டீமில் இருக்கும், தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் யார்.. யார்? அப்படி எதிர் பார்த்து காத்துகொண்டிருக்கும் அந்த ஸ்லீப்பர் செல்களில் 20 எம்.எல்.ஏ-க்கள் விரைவில் வெளியில் வர இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி முதலில் வரும் அவர்களைத்தான், ஸ்லீப்பர் செல் என்று தினகரன் சொல்லிவந்தார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்த ஸ்லீப்பர் செல்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அ.தி.மு.க-வில் உள்ள 50 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இதுவரை தினகரனைத் தொடர்புகொண்டு, இது வெறும் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக வாழ்த்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஸ்லீப்பர் செல்களில் 11 அமைச்சர்களும் உள்ளார்களாம். நேற்று வரை தினகரனின் கஸ்டடியில் இருப்பதாக குக்கர் கேங் கோஷம் போடாத குறையாக சொல்லிவருகிறது.

சட்டசபை கூட்டத்தொடருக்குப்பின், வெளியில் வரவிருக்கும் 20 ச்லீப்பர்ஸ் செல்களை தவிர, ஏற்கனவே கைவசமிருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் எம்.எல்.ஏக்கள் தினகரனை ஆதரித்தார்கள். அவர்களைத் தகுதிநீக்கம் செய்த தனக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்று நினைக்கிறாராம் தினா. இப்படி தீர்ப்பு வருவதற்கு முன்பாக, உற்சாகமாக சில காரியங்களைச் செய்ய உள்ளாராம். முதலில் அவர் செய்யவிருப்பது ஆர்.கே.நகரில் வீடு வாங்கி நிரந்தரமாக தங்கி தொகுதியை நிரந்தரமாக்கி வைத்துக் கொள்வது.

இதனால் தான் வைகுண்ட ஏகாதசி நாளன்று பதவிபிரமாணம் ஏற்றுள்ளார். எம்.எல்.ஏ ஆனதும் இன்னும் துடிப்போடு இருக்கிறாராம். இதுவரை அடக்கி வாசித்தவர் இனி கிளர்ந்து எழப்போகிறாராம். ‘எதையாவது செய்து ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்’ ‘எதையாவது செய்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்’ அதற்காக சில அதிரடிகளை செய்யவிருக்கிறாராம், இதெல்லாம் ஸ்லீப்பர் செல்ஸ் வருவதற்கு முன்பே களத்தில் இரங்கி அடிக்க தொடங்கிவிட்டார் என சொல்கிறார்கள் குக்கல் பாய்ஸ்.