மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்.?திமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்ட தொகுதி பங்கீடு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

It is reported that a decision has been taken to allocate two seats each to the two communist parties in the DMK alliance KAK

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கவது தொடர்பாக குழு அமைப்பட்டது. இந்த குழுவோடு கூட்டணி கட்சியினர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைய நடத்தினர். அந்த வகையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொமதேகவிற்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டது.

It is reported that a decision has been taken to allocate two seats each to the two communist parties in the DMK alliance KAK

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு.?

அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுகவுடன் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இன்று மூன்றாம்  கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சுப்ராயன் கூறுகையில், தொகுதி பங்கீடு குறித்து மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது.  சிட்டிங் தொகுதிகளுக்கு விருப்பம் தெரிவித்துள்ளோம்.

It is reported that a decision has been taken to allocate two seats each to the two communist parties in the DMK alliance KAK

பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மிக விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டத. தொடர்ந்து  மார்க்சிஸ்ட் மற்றும் மதிமுகவுடன் தொகுதி உடன்பாடு பேச்சு நடைபெற்று வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டது. இதே போல மதிமுகவிற்கு ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்கப்பட்டது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என மதிமுக தெரிவித்துள்ளதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.  

இதையும் படியுங்கள்

இழுபறி.. இன்றாவது முடிவு ஏற்படுமா.? கம்யூனிஸ்ட், விசிக,மதிமுகவின் எதிர்பார்ப்பு என்ன.? விட்டு கொடுக்குமா திமுக

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios