Asianet News TamilAsianet News Tamil

கூட்டணிக்கு தலைமை தாங்குவது காங்கிரஸின் உரிமை இல்லை... காங்கிரஸை பொளந்துகட்டிய பிரசாந்த் கிஷோர்..!

இதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி, “"எந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி பற்றி பேசுகிறீர்கள். தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது இல்லை. வலிமையான மாற்று கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.

It is not the right of the Congress to lead the alliance ... Prasanth Kishore who insulted the Congress ..!
Author
Delhi, First Published Dec 2, 2021, 10:12 PM IST

வலுவான எதிரணி அமைய காங்கிரஸின் யோசனை மிகவும் முக்கியமானது. ஆனால், அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி என்பது அக்கட்சியின் முடியுரிமை அல்ல என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி திட்டமிட்டு வருகிறார். எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் மம்தா ஈடுபட்டார். இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தும் பேசினார். ஆனால், இந்த விசயத்தில் காங்கிரஸ் கட்சி தேவையில்லாமல் தாமதப்படுத்துவதாக கூறி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸிடமிருந்து ஒதுங்க தொடங்கியுள்ளது. மேலும் பல மா நிலங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியிலும் மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் மம்தா பானர்ஜி கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.

It is not the right of the Congress to lead the alliance ... Prasanth Kishore who insulted the Congress ..!

இந்நிலையில், மும்பைக்கு வந்த மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவையும் சந்திக்க இருந்தார். ஆனால், உத்தவ் தாக்கரேவுக்கு உடல் நல குறைவால் சந்திப்பு நடக்கவில்லை. பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தற்போது நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க ஒருவரும் இல்லை. இதனால், மாற்று அணி உருவாக்கப்பட வேண்டும்.” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சரத் பவார் தலைமை ஏற்பாரா என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி, “"எந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி பற்றி பேசுகிறீர்கள். தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது இல்லை. வலிமையான மாற்று கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். நாம் பாஜகவுக்கு எதிராக கண்டிப்பாகப் போராட வேண்டும். சிலர் போராடாதபோது நாம் என்ன செய்யமுடியும். நாம் போராட வேண்டும்” என காங்கிரஸை மறைமுகமாகச் சாடினார். It is not the right of the Congress to lead the alliance ... Prasanth Kishore who insulted the Congress ..!

மம்தா பானர்ஜியின் கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அக்கட்சி தலைவர்கள் மம்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “வலுவான எதிரணி அமைய காங்கிரஸின் யோசனை மிகவும் முக்கியமானது. ஆனால், அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி என்பது அக்கட்சியின் முடியுரிமை அல்ல. அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் 90 சதவீதம் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிக்கு தலைமை ஜனநாயக முறைப்படி அமைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios