Asianet News TamilAsianet News Tamil

இது நாகலாந்து இல்ல தமிழ்நாடு.. வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது.. ஆளுநரை சரமாரியாக எச்சரித்து EVKS.

நாகலாந்து காரர்களை போல தமிழர்களை என்ன வேண்டாம் என்றும் அப்படி எண்ணினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும்,  நீங்கள் ரயில் ஏறும் நேரம் வந்துவிட்டது என்றும் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரித்துள்ளார்

It is not Nagaland, Tamil Nadu .. It is time to go home .. EVKS warns the Governor with a barrage.
Author
Chennai, First Published Apr 28, 2022, 6:52 PM IST

நாகலாந்து காரர்களை போல தமிழர்களை என்ன வேண்டாம் என்றும் அப்படி எண்ணினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும்,  நீங்கள் ரயில் ஏறும் நேரம் வந்துவிட்டது என்றும் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காரணம் காட்டி வரும் ஆளுநரை கண்டித்து  காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

தமிழக ஆளுநராக ஆர்.என.ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றுகின்ற ஒவ்வொரு தீர்மானத்தின் மீது ஆளுநர் அலட்சியமாக இருந்து வருகிறார். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தாமதம் செய்து வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் கலந்து கொண்டனர்.

It is not Nagaland, Tamil Nadu .. It is time to go home .. EVKS warns the Governor with a barrage.

அதில் கலந்து கொண்டு பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ஆளுநரை ஆளுநர் என்று சொல்லாமல் வெறும் ரவி என்றே கூறலாம், அவருக்கு மரியாதை தர வேண்டிய அவசியம் கிடையாது. ரவி இதற்கு முன்பு பணிசெய்த நாகலாந்தில் பாம்பு கறி, நாய் கறி சாப்பிடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் நெல் அரிசி, சோறு சாப்பிடுபவர்கள். கொஞ்சம் உரசினாலும் தீ பற்றிக்கொள்ளும். இப்போது கூட செல்வப்பெருந்தகையிடம் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பற்றி கூறும்போது கோமளவல்லி என குறிப்பிட்டு பேசியிருக்கலாம் என கூறினேன். அமித்ஷா பேச்சைக் கேட்டுக் கொண்டு ரவி எருமை மாடு போல அசைவற்று இருக்கிறார். தமிழர்கள் நாகரிகமாக இருக்கிறார்கள் என்று ரவி நினைக்கிறார்.

It is not Nagaland, Tamil Nadu .. It is time to go home .. EVKS warns the Governor with a barrage.

தமிழர்களைப் பற்றி தெரிந்துகொள்ள டெல்லியில் பழைய தலைவர்களை கேட்டுப்பாருங்கள். தேவைப்பட்டால் தமிழர்கற் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள். தமிழக மக்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ரவி தூக்கி எறியப்படுவார்.  தபால்காரன் வேலையை செய்பவர்தான் ஆளுநர் ரவி, ரவி வீடு போய் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது.  ரவியை ஒழிக்க நினைத்தால் அதை விரைந்து செய்ய முடியும், ஆனால் ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதால் பொறுமையாக இருக்கிறோம். ரவி அவர்களே குழந்தை குடும்பத்தோடு இருக்கிறீர்கள்,  ஒருவாரத்திற்குள் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப வில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரமாகும். ரவி உங்களை ரயிலில் டெல்லி அனுப்பி வைத்து விடுவோம்.  இவ்வாறு அவர் பேசினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios