பெண்களின் பாதை எப்போதும் மலர் பாதையாகவே இருக்காது, கற்கள் முட்கள் அதிகமுள்ள பாதையாக தான் இருக்கும். அந்தப் பாதையை கோட்டையை அடையும் பாதையாக பெண்கள் மாற்ற வேண்டும். பெண்கள் எப்போதும் ஒரு இரும்பைப் போன்றவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும், வீட்டில் தான் பாதுகாப்பு என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம் ஆனால் வீட்டிலும் பாதுகாப்பு இல்லை என்கின்ற உணர்வு புரியவைத்தது இந்த கொரோனா காலம் தான்.
இஷ்டத்துக்கு உடை உடுத்த வேண்டும் என்பது தான் பெண்ணுரிமை அல்ல என தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் அவசியம் என்றும், அப்படி இருந்தால்தான் பெண்களிடம் அவர்கள் சரியாக நடந்து கொள்வார்கள் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தனது கடினமான உழைப்பால் சாதாரண அரசியல்வாதியாக இருந்து ஆளுநர் வரை உயர்ந்து இருப்பவர் தமிழிசை சௌந்தர்ராஜன். தமிழக பாஜகவை தமிழகத்தில் வீரிமிக்க கட்சியாக உருவாக்கியதில் அவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. எந்த வகையிலும் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இந்நிலையில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தற்கொலை என்ற முடிவை பெண்கள் எடுக்கக்கூடாது என பேசியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சி முகாம் நடைபெற்றது. அதை தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய அவர், எந்த மாநிலத்தில் கலந்துகொண்டு பேசினாலும் தமிழகத்தில் கலந்து கொண்டு பேசுவது தனக்கு தனி மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதையும் படியுங்கள்: கேப்டன பாக்கவிட மாட்டேங்கிறாங்க.. விஜயகாந்த் போட்டோவை பார்த்து குலுங்கி குலுங்கி அழும் ராதாரவி.

எத்தனை தடைகள் வந்தாலும் அது அனைத்தையும் உடைத்தெறிந்து முன்னேற வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம், எல்லா துறைகளிலும் பெண்கள் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள், ஆனால் பெண்களுக்கு சம உரிமை கிடைத்திருக்கிறதா என்பதே பெரும் கேள்வியாக உள்ளது . என்னைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு எப்படி கட்டுப்பாடுகள் உள்ளதோ அதுபோல ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் அவசியம். பெண்கள் மட்டும் எப்போதும் வீட்டிற்கு சீக்கிரம் வர வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கிறது, அதே போன்ற கட்டுப்பாடுகள் ஆண்களுக்கும் வேண்டும். அப்படி இருந்தால்தான் அவர்கள் பெண்களிடம் சரியாக நடந்து கொள்வார்கள். இதேபோல் பெண்ணுரிமை எது என்று நாம் நினைப்பதில் தான் பிரச்சனை ஏற்படுகிறது.
நாகரீகமாக உடை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் ஆடை அணியக் கூடாது, உடையில் கட்டுப்பாடு கவனமாக இருக்க வேண்டும். நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதற்காக, ஒன்றைச் செய்வதற்கு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் செய்துவிடமுடியாது. அதே சுதந்திரம் மற்றவர்களுக்கும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். நான் நன்றாக படிக்க வேண்டும், நான் சாதனை செய்ய வேண்டும், மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது நம் உரிமையே தவிர என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண்ணுரிமை அல்ல என்றார். இதேபோல் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தற்கொலை என்பது தீர்வு அல்ல, அது போன்ற தவறான முடிவுகளை பெண்கள் எடுக்கக் கூடாது என்றார்.

பெண்களின் பாதை எப்போதும் மலர் பாதையாகவே இருக்காது, கற்கள் முட்கள் அதிகமுள்ள பாதையாக தான் இருக்கும். அந்தப் பாதையை கோட்டையை அடையும் பாதையாக பெண்கள் மாற்ற வேண்டும். பெண்கள் எப்போதும் ஒரு இரும்பைப் போன்றவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும், வீட்டில் தான் பாதுகாப்பு என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம் ஆனால் வீட்டிலும் பாதுகாப்பு இல்லை என்கின்ற உணர்வு புரியவைத்தது இந்த கொரோனா காலம் தான். நம் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் வைரசை விட ஆபத்தானவர்கள் உள்ளனர், அதற்காகவே பள்ளிகளில் சீக்கிரம் திறக்க வேண்டும் என்கிற முடிவை அரசு எடுத்துள்ளது என நகைச்சுவையாக கூறினார்.
இதையும் படியுங்கள்: பதவிக்கு வந்து ஒரு வாரம்தான் ஆச்சு.. போகப்போக பாருங்க.. அசால்டு செய்த மேயர் பிரியா
ஒரு ஆண் கையில் பணம் இருப்பதை காட்டிலும் பெண் கையில் பணம் இருந்தால் அந்த வீடு பயன்பெறும் என்றார். முதலில் ஆண்கள் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் பாலியல் தற்கொலைகள் தொந்தரவுகள் வரக்கூடாது என்பதுதான் தன் விருப்பம் என்றார். இப்போதும் பெண்கள் தங்கள் குறைகளை தயக்கமின்றி கூறும் வகையில் அமைப்புகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் தன்னிடம் வந்து உதவி கேட்க பெண்களுக்காக எப்போதும் என்னுடைய அலுவலக கதவுகள் திறந்தே இருக்கும் என்று கூறினார்.
