மனுதர்மத்தை தாம் விமர்சித்துப் பேசியதை திரித்து, பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என தாம் பேசியதாக பொய்யாக வக்கிர கும்பல் வதந்தி பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனுதர்மமானது இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்றே குறிப்பிட்டிருக்கிறது என்பதுதான் பெரியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியது. இந்த நிலையில் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் எனும் சனாதன நூலை எரிக்கும் போராட்டம்  நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளது. இது சர்ச்சையை கிளப்பியது. இதற்காக திருமாவளவன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.அவரை கைது செய்யவேண்டும் காயத்ரிரகுராம் இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜீன்சம்பத் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.., “நவராத்திரி காலத்தில் பெண்களை பற்றி வழிபடும் இந்நேரத்தில் திருமாவளவன் பேசியது உள்நோக்கத்தோடு உள்ளது. திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே பத்தாது அவர் கைது செய்யபட வேண்டும். ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வருவார். சரியான நேரத்தில் வருவார். எல்லாம் தயாராக இருக்கிறது, அவர் அரசியலுக்கு வர எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

நடிகர் ஜோசப் விஜய் மற்றும் அவருடைய தகப்பனார் இவர்களெல்லாம் விஜய் மக்கள் மன்றம் எல்லாம் வைத்திருக்கிறார்கள். ரசிகர்களை சந்திக்க வேண்டியது என்பது வழக்கமான ஒன்றுதான். அவர்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்தால் அவர்கள் வர வேண்டியதுதான். வந்தால் இந்து மக்கள் கட்சி அவர்களை வரவேற்கும். அவர்களை களத்தில் சந்திக்கும்” எனக் கூறினார்.