Asianet News TamilAsianet News Tamil

இந்த 16 மாவட்டங்களில் அடித்து நொறுக்கபோகிறது... தமிழக மக்களே மிகவும் எச்சரிக்கையா இருங்க..!!

அடுத்த 48 மணி நேரத்தில் (17-11-2020) தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

It is going to be smashed in these 16 districts ... People of Tamil Nadu, be very careful .. !!
Author
Chennai, First Published Nov 16, 2020, 1:49 PM IST

குமரி முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

It is going to be smashed in these 16 districts ... People of Tamil Nadu, be very careful .. !!

அடுத்த 48 மணி நேரத்தில் (17-11-2020) தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 72 மணி நேரத்தில் (18-11-2020) தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை தொடரும். நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டிபதிவாகக்கூடும். 

It is going to be smashed in these 16 districts ... People of Tamil Nadu, be very careful .. !!

கடந்த 24 மணி நேரத்தில்  ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) 18 சென்டிமீட்டர் மழையும், காஞ்சிபுரம் 16 சென்டி மீட்டர் மழையும், மரக்காணம் (விழுப்புரம்) 12 சென்டிமீட்டர் மழையும், வானமாதேவி (கடலூர்) 11 சென்டிமீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) மகாபலிபுரம் தலா 10 சென்டிமீட்டர் மறையும், திருக்கழுகுன்றம், உத்திரமேரூர், (காஞ்சிபுரம்) கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 9 சென்டிமீட்டர் மழையும், கடலூர், ஆரணி, (திருவண்ணாமலை) திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுராந்தகம் 8 சென்டிமீட்டர் மழையும்.  செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்) பரங்கிப்பேட்டை (கடலூர்) வந்தவாசி (திருவண்ணாமலை) அரவக்குறிச்சி (கரூர்) தலா 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios