கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" என்று ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா.இந்த விழா தமிழகம் முழுவதும் வழக்கம்போல் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு ஆட்டம் பாட்டத்தோடு விமர்சையாக கொண்டப்படுவது வழக்கம்.இந்தாண்டு கொரோனா தொற்று தாக்கத்தால் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்க இன்னும் அனுமதி வழங்கவில்லை. ஆனால் கர்நாடக மாநிலத்தில் சதுர்த்தி விழா கொண்ட அனுமதி வழங்கியுள்ளதை ஹெச்.ராஜா ஆண்மையுள்ள அரசு என்று ட்விட் செய்துள்ளது தமிழக அரசுக்கு தலைகுனிவாக அமைந்துள்ளது. தமிழக அரசு இனியாவது முடிவு எடுக்குமா என்று இந்து அமைப்புகள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். 

 கொரோனாவால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை அமைத்து, ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், "மாநிலம் முழுவதும் நாள்தோறும் சராசரியாக ஆறாயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுவரும் நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்லலம் அவசியமா" என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.இருப்பினும், யார் என்ன சொன்னாலும் மாநிலம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்று இந்து அமைப்புகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன.பொதுநல வழக்கு போட்டவரைக்கூட நீதிமன்றம் வழக்கை திரும்ப பெறவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் சொல்லியது.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட கர்நாடக மாநில அரசு அனுமதி அளித்துள்ளதை குறிப்பிட்டு, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வழக்கம்போல் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " சென்னையிலும் நேற்றிலிருந்து டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டது. இதனால் கொரோனா வராதாம். ஆனால் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5-10 பேர் சமூக இடைவெளியோடு விசர்ஜனம் செய்தால் கொரோனா வந்துடுமாம். பகுத்தறிவு.கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" என்று ஹெச்.ராஜா.