Asianet News TamilAsianet News Tamil

மூத்த அமைச்சர்களின் துறைகளில் மாற்றமா.? டிஆர்பி ராஜாவுக்கு எந்த துறை.? பிடிஆரின் இலாக்காவும் மாற்றமா.?

தமிழக அமைச்சரவையில் நாசர் நீக்கப்பட்டு, டிஆர்பி ராஜா சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

It has been reported that the industry department will be given to TRB Raja who will take office as the new minister
Author
First Published May 10, 2023, 8:24 AM IST

தமிழக அமைச்சரவை மாற்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டும், புதிதாக ஒரு அமைச்சருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது முதல் முறையாக அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சர் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு நேற்று ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியானது. அந்த வகையில் திருவள்ளூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாசருக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது நாசர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 3 முறை மன்னார்குடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

T.R.B.Rajaa: 3 முறை எம்.எல்.ஏ.. திமுக ஐடி விங்கின் ‘மாஸ்டர் மைண்ட்’ - யார் இந்த டி.ஆர்.பி ராஜா?

It has been reported that the industry department will be given to TRB Raja who will take office as the new minister

அமைச்சர்களின் துறைகளில் மாற்றம்.?

ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறவுள்ள விழாவில் டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில் தற்போது முதலமைச்சரோடு சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக உள்ள நிலையில், மூத்த அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் புதிதாக அமைச்சரவையில் இணைந்துள்ள டிஆர்பி ராஜாவிற்கு தொழில் துறை மற்றும் முதலீடு ஊக்குவிப்பு துறை ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தொழில்துறையில் இருந்த தங்கம் தென்னரசுவிற்கு நிதித்துறையும், நிதித்துறையை தன் வசம் வைத்திருந்த பிடிஆருக்கு தகவல் தொழில்நுட்ப துறையும் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பால்வளத்துறையை மனோ தங்கராஜ் அல்லது வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது,

இதையும் படியுங்கள்

அமைச்சர் பதவியில் இருந்து நாசர் மட்டும் நீக்கப்பட்டது ஏன்..? வெளியான பரபரப்பு தகவல்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios