தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், டி.ஆர்.பாலு தலைமையில், ஊர் ஊராகச் சென்று கருத்து கேட்டுகொண்டு இருக்கிறார்கள்.

திருப்பூரில் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகி ஒருவர் 'தயவு செய்து, தேர்தல் அறிக்கையில், மதுக்கடைகள் மூடல் குறித்து குறிப்பிட வேண்டாம். போன முறை நாம் தோற்க, அதுவும் ஒரு காரணம்' எனக் கூறியிருக்கிறார். அப்போது மூத்த நிர்வாகி ஒருவர் எழுந்து, 'நாம், ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. கட்டாயம், மதுக்கடைகள் அடைப்பை அறிக்கையில் கொண்டு வரவேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார். இதைகேட்ட டி.ஆர்.பாலு முகம் பட்டென மாறிவிட்டது.

காரணம் திமுகவினர் சிலர் மதுபான ஆலைகள் வைத்துள்ளனர். டி.ஆர்.பாலுவும் சொந்தமாக மது தயாரிப்பு தொழிற்சாலையை நடத்தி வருகிறார் என்பதால் அவர் முகம் சட்டென மாறியிருக்கிறது.