Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவிலேயே முதன்முறையாக சாதித்த தமிழக காவல்துறை... முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமை..!

இந்தச் சான்றிதழை பெற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். 
 

ISO 27001: 2013 certification for Tamil Nadu Police Control Room
Author
Tamil Nadu, First Published Nov 3, 2021, 1:26 PM IST

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஐ.எஸ்.ஓ 27001:2013 தரச்சான்றை பிரிட்டிஸ் ஸ்டாண்டர்டு இன்ஸ்டிடியூசன் வழங்கியுள்ளது. ISO 27001: 2013 certification for Tamil Nadu Police Control Room

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் இன்று சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல்  கட்டுப்பாட்டு அறைக்கு பிரிட்டிஸ் ஸ்டாண்டர்டு இண்டிடியூஸனால் வழங்கப்பட்ட வழங்கப்பட்ட ஐ.எஸ்.ஓ 27001:2013  சர்வதேச தரச்சான்றினை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தலைமை செயலகத்தில் வழங்கினார்.

இதையும் படியுங்கள்:- விட மாட்டோம்.. வன்னியர் இட ஒதுக்கீடு மேல்முறையீடு..! அமைச்சர் பொன்முடி..!

சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில்,  அவசர கால உதவி எண்கள் 100, 112 மற்றும் 101 அழைப்புகள் கையாளப்படுகின்றன. இது  நவீன  ஒருங்கிணைந்த தரவு தளம் மற்றும் இதர தொழில்நுட்ப  கட்டமைப்புகளுடன்  நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தில் இதுநாள் வரையில் 1.12 கோடி அவசர கால அழைப்பு விவரங்கள் மற்றும் 14.5 இலட்சம் ‘காவலன்’ செயலி பயன்படுத்துவோரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.ISO 27001: 2013 certification for Tamil Nadu Police Control Room

இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தின் தகவல்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு பிரிட்டிஸ் ஸ்டாண்டர்டு இண்டிடியூஸனால் சர்வதேச தரச்சான்று  வழங்கப்பட்டுள்ளது. இச்சான்றானது, இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டிற்கு பெறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சைபர் கிரைம்), அமரேஷ் புஜாரி, காவல்துறை கூடுதல் இயக்குநர் (தொழில்நுட்ப சேவை), வினித் தேவ் வான்கடே, காவல்துறை துணைத் தலைவர் (தொழில்நுட்ப சேவை), எஸ்.மல்லிகா, அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இந்தச் சான்றிதழை பெற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்:- வீர வசனம் பேசிவிட்டு நீங்களே இப்படி செய்யலாமா? டிடிவி கேட்ட ஒரே கேள்வி.. திக்குமுக்காடிய திமுக..!

இதுஒருபுறமிருக்க, லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதச் செயல்களை அனுமதிக்கும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனடிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இதுகுறித்து அனைத்துகாவல் துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் தலைமையகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.ISO 27001: 2013 certification for Tamil Nadu Police Control Room

தடை செய்யப்பட்ட லாட்டரிவிற்பனை மற்றும் சொத்து தொடர்பான விவகாரங்கள் போன்றவற்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை லஞ்சம் பெறப்படுவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட விரோத மதுவிற்பனைக்கு 60 ஆயிரம் ரூபாயும், மணல் கடத்தலுக்கு 30 ஆயிரம் ரூபாயும், சூதாட்டம், விபத்து தொடர்பான வழக்குகளில் 10 ஆயிரம் ரூபாய் வரையும் லஞ்சம் பெறப்படுகிறது. காவல் நிலையங்களில் எழுத்தர் முதல் ஆய்வாளர் வரை, 100ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரைலஞ்சம் பெறுவது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்:- பட்டாசு வெடித்ததில் இடது கண்ணை இழந்த 11 வயது சிறுவன்... வேடிக்கை பார்த்தபோது நடந்த பரிதாபம்..!

எனவே, லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் போலீஸார் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், அதிகாரிகள் அனைவருக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios