எப்போதும் என்னிடத்தில் இரட்டை நிலைப்பாடு இருந்தது கிடைத்தது, பாரதிய ஜனதா கட்சி எல்லோரையும் சமமாக பாவிக்கிற ஒரு காட்சி, இந்தக் காட்சியில் இஸ்லாமியர் ஒருவர் இருப்பது பெரிய விஷயம் கிடையாது, எப்போதும் இஸ்லாமியர்கள் பாஜகவை எதிரியாக பாவித்தால் அந்த எதிர்ப்பு மனநிலை அதிகமாகத் தான் ஆகும், எதிர்ப்பு மனநிலையை தூக்கி எறிந்துவிட்டு நட்பு பாராட்டினால்
இஸ்லாமியர்கள் பாஜகவுடன் பழகிப் பாருங்கள் பாசம் புரியும் என வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார். தமிழக பாஜகவினர் தன்னை அன்போடு அரவணைப்பதாக தெரிவித்துள்ள அவர், இஸ்லாமியர்கள் பாஜகவினருடன் பழகி பார்க்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் நாடு ஏகத்துவ ஜமாத் என்ற அமைப்பை நடத்தி வருபவர் வேலூர் சையத் இப்ராஹிம், இவர் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். குறிப்பாக மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருக்கிறது என பல இஸ்லாமிய அமைப்புகள் கூறி வந்த நிலையில், இவர் மட்டும் பாதிப்பு இல்லை என்று பேசி வந்தார். இதனால் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தார் இவர்.

அதைத்தொடர்ந்து பாஜகவிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார், மிகச் சிறந்த பேச்சாளரும் ஆவார். இந்நிலையில் பாஜகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளராக வேலூர் இப்ராஹிம்மை நியமித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் உற்சாகமாக பாஜகவின் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், பாஜக மற்றும் பாஜகவினர் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மற்றவர்கள் பாஜகவின் பாடுபடுவதை காட்டிலும் அதிக உத்வேகத்துடன் செயல்பட வேண்டுமென நான் பணியாற்றி வருகிறேன்
எப்போதும் என்னிடத்தில் இரட்டை நிலைப்பாடு இருந்தது கிடைத்தது, பாரதிய ஜனதா கட்சி எல்லோரையும் சமமாக பாவிக்கிற ஒரு காட்சி, இந்தக் காட்சியில் இஸ்லாமியர் ஒருவர் இருப்பது பெரிய விஷயம் கிடையாது, எப்போதும் இஸ்லாமியர்கள் பாஜகவை எதிரியாக பாவித்தால் அந்த எதிர்ப்பு மனநிலை அதிகமாகத் தான் ஆகும், எதிர்ப்பு மனநிலையை தூக்கி எறிந்துவிட்டு நட்பு பாராட்டினால், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் எனக்காக கொடுக்கிற அன்பை எல்ல இஸ்லாமியர்களுக்கும் தருவார்கள். பல இடங்களில் எனக்கு தாக்குதல் நடந்தபோது பாஜக தொண்டர்கள் என்னைப் பாதுகாத்து அவர்கள் மண்டையில் காயமடைந்தார்கள், இவர் ஒரு இஸ்லாமியர் தானே இவர் அடிபட்டால் படட்டும் என்று யாரும் என்னை விட்டு போகவில்லை.

அந்தளவிற்கு என் மீது அன்பாக இருக்கிறார்கள் எனவே தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாஜக குறித்து இஸ்லாமியர்களுக்கு ஒரு அச்சம் இருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்கு எல்லா இஸ்லாமியர்களும் வாருங்கள், பேசுங்கள், பழகுங்கள். ரஜினிகாந்த் படத்தில் சொல்வது போல பழகலாம் வாருங்கள் என்பது போல பாஜகவுடன் பழகிப் பாருங்கள். நீங்கள் பழகிப் பார்த்தால் தான் பாஜகவின் பாசம் புரியும், உண்மையிலேயே இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் பாஜகவினர். எனவே எல்லோருமே இந்த தேசிய நீரோட்டத்தில் கலந்து பயணிக்கவேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
