குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை லாலா குண்டா பகுதி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அறிவுறுத்தியும் கலைந்து செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டு அடிதடியானது. சென்னையில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற கல்வீச்சில் காவல்துறை இணை ஆணையர் படுகாயம் அடைந்துள்ளார். கல்வீச்சில் படுகாயம் அடைந்த சென்னை மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸார் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த போராட்டக்காரர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து குளச்சல், மேலப்பாளையம், மதுரை, கம்பம், கோடைக்கானல், வந்தவாசி, பேகம்பூர், இராமநாதபுரம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல், சங்கரன்கோவில், தென்காசி, விருதுநகர்,முத்துப்பேட்டை, தேவதானப்பட்டி, கோவை,பழனி, கடலூர் தமிழகம் முழுவதும்  போராட்டம் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் #கலவரம்தூண்டும்திமுக என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் முதலிடத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதில், திருவாரூர் அருகில்  நடந்த சாலை விபத்தில் இறந்து போனவரின் புகைப்படத்தை CAAவுக்கு எதிரான போராட்டத்தில் இறந்ததாக பொய்யான தகவலைப் பரப்புகிறார் திமுக எம்.பி.  டாக்டர்.செந்தில் குமார். தமிழகக் காவல்துறை அந்த வாகன விபத்து குறித்தும் முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

 

பிணம்,பணம் இந்த இரண்டையும் வைத்து கேவல அரசியல் செய்யும் இந்த கேடு கெட்ட திராவிட கட்சி நமக்கு தேவையா. என் அருமை சகோதர சகோதரிகளே சிந்தியுங்கள். உங்கள் ஆதரவு உங்களுக்கு மட்டுமில்ல. உங்கள் சந்த தியனருக்கும் சேர்த்தே... இனியாவது விழித்திருப்போம். 
போராட்டங்களை தூண்டிவிட்டு அப்பாவி மக்களை பலிகடா ஆக்குவது. ஒரு மத வாக்குகளை பெற, இன்னொரு மதத்தை இழிவு படுத்தி பேசுவது. குடும்ப அரசியல் என்ற பெயரில், தமிழ்நாட்டு வளங்களை சுரண்டியது. அனைவரையும் அடிமையாக்க நினைப்பது இது தான் திமுகவின் கொள்கை’’என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.