ரஜினியின் கருத்து தங்களுக்கு அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி கலவரம் குறித்து தனது பலத்த கண்டனத்தை தெரிவித்திருந்தார். டெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி, உளவுத்துறை என்பது உள்துறை அமைச்சகம் தோல்விதான், கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள் இல்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள் என ரஜினி ஆவேசமாக பேசியிருந்தார். குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்த ரஜினி, மத்திய அரசு அதில் பின்வாங்கும் என தான் நினைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ரஜினியின் கருத்து தங்களுக்கு அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை கேட்டறிந்த ரஜினி, தனது கருத்தையும் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

'பெண்ணுரிமை பேசும் திரௌபதி'..! இரண்டு முறை பார்த்து உள்ளம் குளிர்ந்த ராமதாஸ்..!

முன்னதாக நேற்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவா் அபுபக்கா் ரஜினியை சந்தித்து பேசியிருந்தார். இன்று இஸ்லாமிய மதகுருமார்கள் சிலர் சென்று ரஜினியை சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து பேசியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்தை இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக சந்தித்து வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பியுள்ளது.