கொரோனா காலத்தில் களப்பணியாற்றுபவர்கள் எத்தகைய ஆபத்தான சூழலில் உள்ளனர் என்பதை உணர்ந்தாவது ஊரடங்கை மீறி ஊர் சுற்றுபவர்கள் அடங்கி இருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா காலத்தில் களப்பணியாற்றுபவர்கள் எத்தகைய ஆபத்தான சூழலில் உள்ளனர் என்பதை உணர்ந்தாவது ஊரடங்கை மீறி ஊர் சுற்றுபவர்கள் அடங்கி இருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கொரோனா வைரஸ் பரவல் அச்சமும், ஊரடங்கும் அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ள நிலையில், தமிழகத்தின் 23 சுங்கச்சாவடிகளில் சாலைக் கட்டணம் ரூ.30 வரை உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டில் ஊரடங்கை தளர்த்தும் விஷயத்தில் தமிழக அரசு மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலுக்கு வழிவகுக்காத வகையில் அரசு முடிவெடுக்க வேண்டும்.

சென்னை மருத்துவர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நேற்று மட்டும் 3 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது கவலையளிக்கிறது. மருத்துவர்களின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர்களும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

Scroll to load tweet…

கொரோனா நோயால் நேற்று ஒரே நாளில் 2 காவல் அதிகாரிகளும், 2 பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் களப்பணி ஆற்றுபவர்கள் எத்தகைய ஆபத்தான சூழலில் உள்ளனர் என்பதை இது காட்டுகிறது. இதை உணர்ந்தாவது ஊரடங்கை மீறி ஊர் சுற்றுபவர்கள் அடங்கி இருக்க வேண்டும்'' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.