பால்வளத்துறை அமைச்சர் நாசர் மகன் பதவி பறிப்புக்கு இது தான் காரணமா? வெளியான தகவல்..!
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆசிம் ராஜா. திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஆவடி மாநகர செயலாளராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தலில் ஆசிம் ராஜா ஆவடி மாநகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆசிம் ராஜா. திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஆவடி மாநகர செயலாளராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தலில் ஆசிம் ராஜா ஆவடி மாநகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆசிம் ராஜா, ஆவடி மாநகராட்சி கவுன்சிலராகவும், மண்டலக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் நாசர் மகன் ஆசிம் ராஜாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆவடி மாநகர திமுக செயலாளராக சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாகவும், மாநகர கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த 7ம் தேதி அறிவிப்பை வெளியிட்டார். அமைச்சரின் மகன் பதவி பறிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் நாசரின் மகன் பதவி பறிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. ஆவடி மாநகராட்சி பணிக்குழு தலைவராக இருப்பதால், மாநகராட்சி பணிகளுக்கான ஒப்பந்த விவகாரத்தில் ஆசிம்ராஜாவின் தலையீடு அதிகம் இருந்ததாகவும், கட்சி நிர்வாகிகள் மத்தியில் இவர் மீது அதிருப்தி இருப்பதாகவும் கட்சித் தலைமைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அதன்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவடி மாநகர திமுக பொறுப்பாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள சன்.பிரகாஷ் அமைச்சர் ஆவடி நாசரின் ஆதரவாளர் இல்லை. கடந்த 25 ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி நாசரின் ஆததரவாளர் அல்லாத ஒருவர் கட்சி பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் அப்பகுதி திமுகவினர் கூறி வருகின்றனர்.