Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி இவர்தான்..?? பட்டியலில் முந்தும் 4 பேர்..

ஆனந்தி பென் படேல்: ஆனந்தி பென் படேல், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர், உ.பி., கவர்னராக உள்ளார். குஜராத் முதல்வராகவும் இருந்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் ஆட்சியில் விஞ்ஞானி அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழிந்தது, அதனால் அவர் குடியரசுத் தலைவரானார் எனபதை அனைவரும் அறிவர்.

Is this the next President of India .. ?? Top 4 on the list ..
Author
Chennai, First Published Jan 27, 2022, 6:52 PM IST

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது நிலையில் அந்தப் பட்டியலில் 4 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதில் ஒருவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
அதை விரிவாக காணலாம்:- 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் 2022 ஜூலை 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஐந்து மாதங்களுக்கு பின், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் பணிகள் துவங்கும். முன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுக்கு பின், அதற்கான தேர்வு பணிகள்  தீவிரமனையும். இதற்கிடையில், ஜனாதிபதி வேட்பாளரைப் பொறுத்தவரை, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே நான்கு பெயர்கள் அடிபடுகிறது. உ.பி., கவர்னர் ஆனந்தி பென் படேல், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் இதில் அடங்குவர். இதே நேரத்தில் பிரதமர் மோடி கடைசி நேரத்தில் ஒரு புதிய பெயரை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கவும் வாய்ப்புகள் உள்ளது. 

Is this the next President of India .. ?? Top 4 on the list ..

ஆனந்தி பென் படேல்: ஆனந்தி பென் படேல், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர், உ.பி., கவர்னராக உள்ளார். குஜராத் முதல்வராகவும் இருந்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் ஆட்சியில் விஞ்ஞானி அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழிந்தது, அதனால் அவர் குடியரசுத் தலைவரானார் எனபதை அனைவரும் அறிவர். அதன் மூலம், நாடு மற்றும் உலக முஸ்லிம்களுக்கு ஒரு செய்தியை வழங்க பாஜக முயன்றது. தலித் சமூகத்தில் இருந்து வந்த ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் ஆக்கியதன் மூலம் பிரதமர் மோடி தனது முதல் ஆட்சியில் மற்றொரு பெரிய செய்தியை சொல்லாமல் சொன்னார். முஸ்லீம் மற்றும் தலித்களுக்குப் பிறகு, பாஜக இப்போது 2024 க்கு முன் ஒரு பெண்ணை ஜனாதிபதியாக்குவதன் மூலம் பெண்களுக்கு ஒரு பெரிய அரசியல் செய்தியைக் கொடுக்க விரும்புவதாகவும் தகவல்கள் வருகின்றன. ஏனெனில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் பிரதீபா பாட்டீலை ஜனாதிபதியாக்கியது. இருப்பினும், ஆனந்திபென் படேலுக்கு 80 வயதைத் தாண்டியுள்ளது, அதனால் அவரது பெயரை பரிசீலிப்பது கடினம் என கூறப்படுகிறது.

Is this the next President of India .. ?? Top 4 on the list ..

ஆரிப் முகமது கான்: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உ.பி.யில் உள்ள புலந்த்ஷாஹரில் வசிப்பவர் ஆவார். ஷா பானோ வழக்கில் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இருந்த தன் மத்திய அமைச்சர் பதவியை ஆரிப் ராஜினாமா செய்த பிறகு பரபலமானார். முத்தலாக், சிஏஏ போன்ற விஷயங்களில் ஆரிஃப் பாஜகவுக்கு பாதுகாப்பு கேடயமாக செயல்பட்டு வந்துள்ளார்.  முற்போக்கு சிந்தனை கொண்டவராகவே அவரை பாஜக கருதுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் தாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல, எப்போதும் சமாதானத்தை விருப்புகிறோம் என்று மீண்டும் ஒரு முஸ்லிமை குடியரசுத் தலைவராக்கி இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் மீண்டும் ஒரு செய்தியை வலியுறுத்த பாஜக விரும்புவதாகவும் கூறப்படுகிறது. 

வெங்கையா நாயுடு: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆந்திராவை சேர்ந்தவர், நீண்ட காலமாக பாஜகவில் பல முக்கிய பதவிகளை வகித்து வருகிறார். நாயுடு 2002 முதல் 2004 வரை பாஜகவின் தேசியத் தலைவராகவும் இருந்துள்ளார். அடல் பிஹாரி அரசில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்துள்ளார். நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்றப் பணிகள் போன்ற முக்கியமான துறைகளுக்கு மோடி அரசில் பொறுப்பு வகித்துள்ளார். நாயுடு ஆகஸ்ட் 2017 முதல் துணை ஜனாதிபதியாக இருந்து வருகிறார். நாயுடுவை குடியரசுத் தலைவர் ஆக்குவதன் மூலம், தென்னிந்தியாவில் தனது கட்டமைப்பை வலுப்படுத்த பாஜகவுக்கு அது ஒரு வாய்ப்பாக அமைய்யும் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது. 

Is this the next President of India .. ?? Top 4 on the list ..

நிபுணர்களின் பார்வை:- குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான உறவை வைத்து பார்க்கும் போது, குடியரசுத் தலைவர் பதவிக்கு வெங்கையாவின் பெயரைத்தான் முதலில் பிதரம் முன்மொழிவார் என்றே சொல்லலாம். துணை ஜனாதிபதி பதவிக்கு ஆரிப் முகமதுவை பாஜக வேட்பாளராக நிறுத்தலாம் என ராம் பகதூர் ராய், மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பிரதமரின் செயல்பாடு வியக்க வைப்பதாக உள்ளது என்றும்,

இவை நன்கு அறியப்பட்ட பெயர்களாக இருந்தாலும், இதில் ஒருவரை பாஜக ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க முடியும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு எப்போதும் அனைவரையும் சர்ப்ரைஷ் செய்யும் வகையிலேயே இருந்து வருவதால் இவர்களில் ஒருவர்தான் ஜனாதிபதியாக முன்மொழியப்படுவார் என கூற முடியாது என பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை யாரும் அறியாத, விவாதிக்கப்படாத ஒருவரை மோடி முன்மொழிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டபோதும், ​​அப்போது யாரும் கோவிந்தின் பெயரை எதிர்பார்க்க வில்லை பலரும் அறிமுகமில்லாதவராகவே கோவிந்த இருந்தார் என்றும் கூறுகின்றனர். 

Is this the next President of India .. ?? Top 4 on the list ..

பிரதீப் சிங் என்ற மூத்த பத்திரிகையாளர் கூறுகையில்: கடந்த 45 ஆண்டுகளாக ஜனாதிபதியின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைந்து வருகிறது. நாட்டின் 9வது ஜனாதிபதியாக நீலம் சஞ்சீவ் ரெட்டி 25 ஜூலை 1977 அன்று பதவியேற்றார். அதன்பிறகு, ஒவ்வொரு முறையும் ஜூலை 25-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்கிறார். ரெட்டியைத் தொடர்ந்து கியானி ஜைல் சிங், ஆர்.வெங்கடராமன், ஷங்கர்தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் ஜூலை 25 அன்று பதவியேற்றனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios