Asianet News TamilAsianet News Tamil

இது என்ன தேர்தல் ஆணையமா இல்லை பிஜேபியின் பினாமி ஆணையமா..? ஜோதிமணி ஆவேசம்..!

இது என்ன தேர்தல் ஆணையமா இல்லை பிஜேபியின் பினாமி ஆணையமா?’’ என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். 
 

Is this the Election Commission or the BJP's proxy commission? Jyoti Mani is obsessed
Author
Tamil Nadu, First Published Apr 7, 2021, 12:23 PM IST

இது என்ன தேர்தல் ஆணையமா இல்லை பிஜேபியின் பினாமி ஆணையமா?’’ என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் சுஷ்மா சுவராஜ் மரணம், அருண்ஜேட்லி மரணத்துக்கு பிரதமர் மோடியின் அழுத்தம் காரணம் என்று பேசினார். இதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில் என் தாய் பாஜகவில் சிறப்பாக நடத்தப்பட்டார், உங்கள் அரசியலுக்காக அவரை இழுக்காதீர்கள் என சுஷ்மா சுராஜின் மகள் ட்விட்டரில் உதயநிதிக்கு பதில் அளித்திருந்தார்.Is this the Election Commission or the BJP's proxy commission? Jyoti Mani is obsessed

அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்திருந்த உதயநிதி ஸ்டாலின், “ சீனியர்களை ஓரங்கட்டி குறுக்குவழியில் பொறுப்புக்கு வந்ததாக பிரதமர் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் என்னை விமர்சித்தார். சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு குறுக்குவழியில் பிரதமர் ஆனவர் நீங்கள்தான் என்று வேறொரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவருக்கு பதிலளித்தேன். மற்றபடி பானுஸ்ரீஸ்வராஜின் தாயாரையோ, சோனாலி ஜேட்லியின் தந்தையாரையோ விமர்சிக்கவேண்டும் என்ற அவசியமே எனக்கு இல்லை. நன்றி”. என பதிலளித்திருந்தார்.Is this the Election Commission or the BJP's proxy commission? Jyoti Mani is obsessed

இந்த புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அதில், “தேர்தலுக்கு தொடர்பே இல்லாத தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட அவதூறு கருத்துக்களை தாராபுரத்தில் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளீர்கள், இதுதேர்தல் விதிமுறை மீறல் ஆகும். எனவே இது தொடர்பாக நாளை (7/4) மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.Is this the Election Commission or the BJP's proxy commission? Jyoti Mani is obsessed

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி, ‘’தனிமனித விமர்சனம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்குக்கு இன்று மாலைக்குள் பதிலளிக்கும்படி  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜியை தரக்குறைவாக , வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய அண்ணாமலைமீது நடவடிக்கை இல்லை.  இது என்ன தேர்தல் ஆணையமா இல்லை பிஜேபியின் பினாமி ஆணையமா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios