பாஜகவினர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் தர்மசங்கடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, பாஜகவினரின் மதவெறி  பேச்சால் அரபு நாடுகளின் முன் மண்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் தர்மசங்கடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, பாஜகவினரின் மதவெறி பேச்சால் அரபு நாடுகளின் முன் மண்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆதங்கம் தெரிவித்துள்ளார். முகமது நபி குறித்து பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கூறியது முற்றிலும் தவறானது எனவும் அவர் கண்டித்துள்ளார். பாஜகவால் ஒட்டுமொத்த நாடும் வெட்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கொந்தளித்துள்ளார். 

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்துவா அமைப்பின் தலைவர்கள் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசினார். அதைத் தொடர்ந்து மற்றொரு பாஜக பிரமுகர் நவீன் ஜிண்டால் தனது ட்விட்டர் பக்கத்தில் இழிவான கருத்துக்களை எடுத்துரைத்தார். இவர்களின் கருத்து நாடு கடந்து வெளிநாடுகளிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரச்சனை கொழுதுவிட்டு ஏரியா தொடங்கியது, இதனால் பாஜகவிலிருந்து இருவரும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். வளைகுடா நாடுகள் இந்திய அரசு இதற்கு பொது மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தி உள்ளது. 

நபிகள்நாயகம் குறித்து பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஜகவினர் அதற்கு விளக்கமளித்துள்ளார். ஆனால் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் இந்தியா மன்னிப்பு கோரியே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகின்றன. இது இந்திய நாட்டிற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பாஜகவினரின் இந்த பேச்சை வன்மையாக கண்டித்து வருவதுடன், பாஜகவினர் செய்த செயலுக்காக ஒட்டுமொத்த தேசமும் மன்னிப்பு கோர வேண்டுமா என ஆவேசம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பாஜகவினர் பேசிய பேச்சால் ஒட்டுமொத்த நாடும் வெட்கம் அடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நம்முடைய கடவுளை எப்படி அவமதிக்க கூடாது என்று நாம் கூறுகிறோமோ, அதேபோல மற்றவர்களின் கடவுளையும் அவமதிக்கும் உரிமை நமக்கு இல்லை.

பாஜகவினர் செய்த தவறால் நாடு மத்திய கிழக்கு நாடுகளிலிடம் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் பயன்படுத்திய வார்த்தை சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது, பாஜகவினர் பேசும் வார்த்தைகள் எந்த ஒரு பிரச்சனையிலும் இந்தியாவின் நிலைப்பாடாக இருக்க முடியாது, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் நான் கேட்க விரும்புகிறேன் தற்போது நடந்து வரும் இத்தகைய நடத்தை பாஜகவிடம் இருந்து அவர் எதிர்பார்த்தாரா? பாஜக செய்யும் தவறுகள் இந்தியாவை அவமானப்படுத்தியுள்ளது. பாஜக செய்த குற்றத்திற்காக நாடு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜகவின் செய்தித் தொடர்பாளர் என்ன இந்தியாவின் செய்தி தொடர்பாளரா? நாட்டில் பணவீக்கம் அதிகரித்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது ஆனால் அரசாங்கம் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

மற்ற பிரச்சினைகளை கிளப்பி விட்டு மக்களை திசை திருப்புகிறது இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவுரங்காபாத்தில், உத்தவ் தாக்கரேவை கிண்டலடிக்கும் வகையில் ட்விட் செய்துள்ளார். மற்றவர்களுக்கு அறிவுரை கூறுபவர்கள் முதலில் தாங்கள் ஒழுக்கமாக இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும். மகாராஷ்டிராவில் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை என உத்தவ் தாக்கரேவின் பெயரை குறிப்பிடாமல் அவர் விமர்சித்திருந்தார்.