இரண்டாவது தலைநகராக மதுரை வந்தால் மகிழ்ச்சி அடைவேன்  என பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கட்சி விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ''தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் திருச்சியா? மதுரையா? என கேட்டதற்கு, பல மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டாவது தலைநகராக மதுரை அமைக்கப்பட்டால் தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி.

பிஜேபிக்கு பின்னால்தான் அதிமுக இயங்குகிறதா என்ற கேள்விக்கு, ஆமாம் மத்திய அரசுக்கு பின்னால் தான் மாநில அரசு இயங்குகிறது. ஆனால் தமிழகத்தில் அதிமுகவே ஆளும் இயக்கம் என்கிறார் முதல்வர் வேட்பாளர்  எடப்பாடி பழனிசாமி என்ற கருத்தில் மாற்றம் உண்டா என்ற கேள்விக்கு, தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளது அதுகுறித்து தற்போது கருத்து சொல்ல இயலாது என்றார். 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது அதிமுகவிற்கு பிரகாசமாக உள்ளது. அதிமுக சிறப்பாக செயல்படுவதால் திமுகவை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதிமுக ஆளும் திமுக வாழும் என்றார்.