மது அருந்துவதால் கொரோனா தடுப்பூசி செயல்படாமல் போக வாய்ப்புள்ளதாக என ரஷ்ய  நிபுணர் தெரிவித்துள்ளார். இது மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் தயாராகியுள்ள கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி விரவி உள்ளது  இந்த வைரசால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதை  உயிர்கொல்லி வைரசை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு நாங்கள்தான் என்ற அறிவிப்புடன் ரஷ்யா ஸ்பூட்னிக்-வீ என்ற தடுப்பூசி ஒன்றை அறிவித்தது. அதாவது, அது ரஷ்யாவின் கமலேயா தொற்றுநோய் தடுப்பு மற்றும் நுண் அறிவியல் ஆய்வு நிறுவனமும்- அந்நாட்டின் நேரடி முதலீட்டு நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுபூசி மருந்தாகும். 

இந்த மருந்து கொரோனா வைரசை எதிர்த்து சிறப்பாக செயல்படுவதாக அந்நாடு அறிவித்ததுடன், அதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியது. இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால் ஐரோப்பிய ஆய்வாளர்கள் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்பூட்னிக்-வி  தடுப்பு மருந்து மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் தனது தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்திய ரஷ்யா, தங்களது தடுப்பூசி அனைத்து கட்ட சோதனைகளையும் வென்று விட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளில் கேள்விக்கு விடை அளித்து விட்டதாகவும் சமீபத்தில் அறிவித்தது. 

மேலும் அதை ரஷ்ய மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாகவும் கூறியது.  இந்நிலையில் வரும் 13-ஆம் தேதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தடுப்பூசி வர உள்ளதாகவும் ரஷ்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி வைரஸ் தடுப்பூசியை பெறுபவர்கள் தடுப்பூசி எடுப்பதற்கு முன்னும் பின்னும் கிட்டத்தட்ட  இரண்டு மாதங்களுக்கு மதுவை தவிர்க்க வேண்டுமென ரஷ்யாவின் நுகர்வோர் பாதுகாப்பு கண்காணிப்பு குழுவில் தலைவர் அன்ன போபோவா கூறியுள்ளார். மது அருந்துவதால் தடுப்பு மருந்தை அது பாதிக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்டு 48 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி அதை மதுபானம் பாதிக்கும் என்பதால் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.