Asianet News TamilAsianet News Tamil

அடிமை அரசு அதிமுகவா..? திமுகவா..? ஸ்டாலின் ஆட்சியை கடுமையாக விமர்சித்த டாக்டர் கிருஷ்ணசாமி..!

12ம் தேதி நீட் தேர்வு இருக்கும்போது 9ம் தேதி சட்டபேரவையை கூட்டி எதற்கு தீர்மானம் போட வேண்டும்

Is the slave admk..? dmk? Dr. Krishnasamy harshly criticized Stalin's rule
Author
Tamil Nadu, First Published Sep 21, 2021, 2:39 PM IST

ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எடப்பாடி அரசை அடிமை அரசு என்றும் அடிமை அரசு பதவி விலக வேண்டும் என்று சொன்னார்கள். திமுக பதவியேற்றதிலிருந்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதைப்பற்றி மு.க.ஸ்டாலிடம் கேள்வி கேட்காதது ஏன் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர், ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எடப்பாடி அரசை அடிமை அரசு என்றும் அடிமை அரசு பதவி விலக வேண்டும் என்று சொன்னார்கள். திமுக பதவியேற்றதிலிருந்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஸ்டாலினை பார்த்து ஊடகங்கள் கேள்வி கேட்காதது ஏன்? 12ம் தேதி நீட் தேர்வு இருக்கும்போது 9ம் தேதி சட்டபேரவையை கூட்டி எதற்கு தீர்மானம் போட வேண்டும். இதுகுறித்து திமுக ஆட்சியை எதிர்த்து கேள்வி கேட்காதது ஏன்? தேர்தலுக்கு முன் திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன.

 Is the slave admk..? dmk? Dr. Krishnasamy harshly criticized Stalin's rule

திமுக ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. இரு ஜி.எஸ்.டி கூட்டங்கள் நடந்துள்ளன. முதல் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தியாகராஜன் இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வளைகாப்புக்கு தேதி கொடுத்ததால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என காரணம் கூறுகிறார். Is the slave admk..? dmk? Dr. Krishnasamy harshly criticized Stalin's rule

எஞ்சியுள்ள சில உரிமைகளையும், நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆகையால் பெட்ரோல், டீசல் உற்பத்தி பொருட்களை சரக்கு, சேவை வரி எல்லைக்குள் கொண்டுவருவதை எதிர்க்கிறோம். என பதிவு செய்துள்ளார். இதே கருத்தை கடந்த அதிமுக அரசு சொன்னபோது, அதை அடிமை அரசு என்று விமர்சித்தனர்’’என்று அவர் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios