பிஜேபியில் பதவிகளைப் பெறுவதற்கு அடிப்படைத்தகுதியே பெண்களிடம் இழிவாக நடந்துகொள்வதுதானா? என காங்கிரஸ் கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லூரி உறுப்பினராக சண்முக சுப்பையாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இதுகுறித்து ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ’’பிஜேபியில் பதவிகளைப் பெறுவதற்கு அடிப்படைத்தகுதியே பெண்களிடம் இழிவாக நடந்துகொள்வதுதானா? ஒரு பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து, அவரிடம் ஆபாசமாக அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபியின் சண்முக சுப்பையாவை, மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லூரி உறுப்பினராக நியமித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. பெண்களை, மருத்துவத்துறை இதை விடவும் யாரும் இழிவு படுத்திவிடமுடியாது.’’ என விமர்சித்துள்ளார்.