Asianet News TamilAsianet News Tamil

திமுக லெட்டர் பேடில் இப்படியொரு பித்தலாட்டமா..? சதுரங்கவேட்டை வசூல்..!

திமுகவினர் விண்ணப்பம் என்ற பெயரில் திமுக லெட்டர் பேடில் விண்ணப்பப் படிவம் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
 

Is the DMK letter pad such a hoax ..? Chess collection
Author
Tamil Nadu, First Published Sep 21, 2021, 3:58 PM IST

சொந்த வீடு என்பது மனித வாழ்க்கையில் பெருங்கனவு. அதிக வருவாய் ஈட்டுவோருக்குச் சொந்த வீடு கனவு எளிதாக நிறைவேறிவிடும். நடுத்தரக் குடும்பத்தினர் பெரும்பாலும் வங்கிகளில் கடன் வாங்கி சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக்கொள்கிறார்கள். ஆனால், ஏழை மக்களுக்குச் சொந்த வீடு என்பதெல்லாம் கனவாக மட்டுமே இருக்கும். இந்நிலையில், சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து திமுகவினர் விண்ணப்பம் என்ற பெயரில் திமுக லெட்டர் பேடில் விண்ணப்பப் படிவம் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.Is the DMK letter pad such a hoax ..? Chess collection

தமிழகத்தில் ஒரு லட்சம் வீடு இல்லாத ஏழைகளுக்கு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கொடுப்பதாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவில் தங்களுக்கு வீடு வழங்கக்கோரி விண்ணப்ப படிவம் கொடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே தலைமைச் செயலகத்தின் எதிர்புறத்தில் உள்ள இப்பகுதியில் ஏராளமான திமுகவினர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படம் அச்சிடப்பட்ட திமுக லெட்டர் பேடில், விண்ணப்ப படிவம் தயாரித்து ஒரு விண்ணப்ப படிவம் இருபது ரூபாயும் அதை பூர்த்தி செய்வதற்கு பத்து ரூபாய் என 30 ரூபாயை பொதுமக்களிடம் வசூலித்து வருகிறார்கள்.

 Is the DMK letter pad such a hoax ..? Chess collection

இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் திமுகவினர் விற்பனை செய்யும் விண்ணப்பப்படிவத்தை பணம் கொடுத்து வாங்கி சென்று பூர்த்திசெய்து தலைமைச்செயலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் தங்களது மனுக்களைப் போட்டு வருகிறார்கள். ஆனால் தலைமைச் செயலகத்தில் திமுக லெட்டர் பேடில் விண்ணப்பப்படிவம் கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தியும் ஏராளமான திமுகவினர் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios