அவரிடம் அரசியல் கற்று வளர்ந்தவர்தான் இந்த ராஜேந்திர பாலாஜி. அவர் திமுகவில் இப்போது இருந்தாலும், அவருக்காக ராஜேந்திர பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் என்கிறார்கள்.
தலைமறைவாகி உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் போலீசுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் போலீசார் அவரை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி அவருடன் நெருக்கமாக இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனிடம் விருதுநகர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவுக்கு தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் கார் டிரைவர் ஆறுமுகம், உதவியாளர் பொன்னுவேல் உள்பட 4 பேரை விசாரணைக்காக விருதுநகர் மாவட்டத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். அடுத்து, கோவை அருகே உள்ள நல்லூர்வயல் மற்றும் குளத்துப்பாளையத்தில், ராஜேந்திரபாலாஜி குறித்து, விருதுநகர் மாவட்ட தனிப்படை இன்ஸ்பெக்டர் ராமராஜ், மாவட்ட குற்றப்பிரிவு எஸ். ஐ. , பாலமுரளி, ஆமத்துார் எஸ். ஐ., கார்த்திக் மற்றும் ஐந்து காவலர் என 8 பேர் அடங்கிய, தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இப்பகுதியில், ''ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடம், விசாரணை செய்து வருகிறோம், '' போலீசார் தரப்பில் கூறப்பட்டது
.
ஆனாலும், ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்கும் விவகாரத்தில் தனிப்படைகளின் எண்ணிக்கை தான் கூடுகிறதே தவிர, அவர் இருக்கும் திசையைக்கூட போலீஸ் மக்கள் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. புகார் கொடுத்தவர்கள் பிற்பாடு பல்டி அடித்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்களை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலமும் கொடுக்க வைத்திருக்கிறது போலீஸ். இதனிடையே, ராஜேந்திர பாலாஜி போலீஸிடம் சிக்காமல் இருக்க காரணம் என, விருதுநகர் மாவட்ட திமுக பவர் புள்ளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டே நோட் போட்டிருக்கிறதாம் உளவுத் துறை. அவரிடம் அரசியல் கற்று வளர்ந்தவர்தான் இந்த ராஜேந்திர பாலாஜி. அவர் திமுகவில் இப்போது இருந்தாலும், அவருக்காக ராஜேந்திர பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் என்கிறார்கள். 
உடன்பிறப்புகள் சுற்றி இருந்தாலும்கூட வேலைவாய்ப்பு, பிரச்னைகள் என எது வந்தாலும், “பாலாஜிக்கு போன் போடு” என்று பலபேர் முன்னிலையிலேயே ஓபனாக பேசுவார் அந்த திமுக விஐபி. அதிமுக ஆர்ப்பாட்டம் நடந்த நாளிலேயே ராஜேந்திர பாலாஜியை வளைக்க போலீஸ் திட்டம் போட்டது. ஆனால், “அவரு முன் ஜாமீன் வாங்கிடுவாரு. நீங்க வேற வேலை இருந்தா பாருங்க. ஆர்ப்பாட்டத்துக்கு ஆயிரக் கணக்குல அதிமுககாரன் வருவான். நீங்கபாட்டுக்கு அரெஸ்ட்... அது இதுன்னு போனீங்கன்னா லா அண்டு ஆர்டர் பிரச்சினை வந்துடும்” என போலீஸை அடக்கி வைத்து விட்டாராம் அந்த திமுக விஐபி. தற்போது இந்த விவகாரங்கள் அனைத்தும் திமுக தலைமையின் காதுவரை போய்விட்டதால், ராஜேந்திர பாலாஜியை விட வெடவெடத்துப்போய்க்கிறார் அந்த விருதுநகர் திமுக விஐபி’’ என்கிறார்கள்.
ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் இன்னும் என்னென்ன ட்விஸ்டுகளெல்லாம் நடக்க இருக்கிறதோ... என அதிமுகவினரை விட திமுகவினர் புலம்பித் தவிக்கின்றனர். நாமும் காத்திருப்போம் பொறுத்திருந்து...!
