அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருவதாகவும் நேற்று வரை திமுகவில் இருந்துவிட்டு இன்று பாஜகவில் சேர்ந்துவிட்டு பாஜக தலைமையில் தான் அதிமுக கூட்டணி என்று சொல்லும் விபி.துரைச்சாமிக்கு யார் அதிகாரம் கொடுத்தது என பொங்கி எழுந்திருக்கிறார் அதிமுக துணை ஒங்கிணைப்பாளர் கேபி. முனுசாமி. 

"ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி மற்றும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனிசாமி, "தேர்தல் ஆணையம் சில கருத்துக்களை கேட்டுள்ளது. அதை தயார் செய்வது தொடர்பாக சட்டத் துறை அமைச்சரிடம் பேசினோம்.
தேர்தல் பணியை அதிமுக நீண்ட காலத்துக்கு முன்பாகவே தொடங்கிவிட்டதாகவும், வேட்பாளர் தேர்வு தொடர்பாக உரிய காலத்தில் உரிய நேரத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்என்றவர் .
பா.ஜ.க. தலைமையில் தான் கூட்டணி என அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறிய கருத்துக்கு பதிலளித்த முனுசாமி, "நேற்று வரை வேறு கட்சியில் இருந்த ஒருவர், தற்போது பாஜகவில் சேர்ந்ததும் பாஜக தலைமையில் தான் கூட்டணி என கூறியதை வன்மையாக கண்டித்துள்ளார்.

அவருக்கு அந்த அதிகாரத்தை கட்சி தலைமை வழங்கி இருக்கிறதா? என்று கூட தெரியவில்லை. மேலும், பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் தலைவர் முருகன் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், அவரே அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளதை ஒத்துக்கொண்டுள்ளார். எனவே கூட்டணி குறித்த கேள்வியே தேவையில்லை என்று கூறினார்.