மின் கட்டணம் ஒரு லட்சம் என வந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போன நடிகை முதல்வருக்கு டிவிட்டரில் புகார் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மின்வாரிய ஊழியர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ரீடிங் எடுக்க வீடுகளுக்கு வரவில்லை. இதனால் மின்வாரியம் முந்தைய மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் கட்டினால் போதும் என்று அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் ரீடிங் எடுக்க வந்தபோது வழக்கமாக வரும் மின் கட்டணத்தை விட பல மடங்கு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார். தமிழ் நடிகர் பிரசன்னா இதுகுறித்து தனது ட்விட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார். அதற்கு கூட தமிழ்நாடு மின்சாரவாரியம் விளக்கம் அளித்ததும் பிரச்சனா தனது கருத்தை வாபஸ்பெற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜீவா நடித்த "கோ" படத்தின்  நடிகை ராதாவின் மகளுமான கார்த்திகா நாயர் தனது வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய்மின் கட்டணம் வந்திருப்பதாகவும் இது முறையற்றதாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து மகாராஷ்டிர மாநில முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு மட்டும் இன்றி தன்னைப் போலவே பலருக்கும் இது போன்று அதிகமாக மின்கட்டணம் வந்திருப்பதாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.