Asianet News TamilAsianet News Tamil

போடியில் தோற்கடிக்கப்படுகிறாரா ஓபிஎஸ்..? திணறடிக்கும் திமுக..!

போடி நாயக்கணூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும்  துணை முதல்வர் ஓ.பி.எஸை தோற்கடிக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

Is OPS being defeated in the competition ..?
Author
Tamil Nadu, First Published Mar 18, 2021, 1:24 PM IST

போடி நாயக்கணூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும்  துணை முதல்வர் ஓ.பி.எஸை தோற்கடிக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அதிமுக – திமுக இடையே வழக்கமான மோதல் வெடித்திருக்கிறது. இது திமுகவின் வேட்பாளர் பட்டியலிலேயே வெளிப்பட்டுவிட்டது. அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் இடங்களில், அவர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிலான வேட்பாளர்களையே திமுக களமிறக்கியுள்ளது. அதில், துணை முதல்வர் போட்டியிடும் போடி தொகுதியும் ஒன்று.Is OPS being defeated in the competition ..?

போடிநாயக்கனூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்று சொல்லக் கூடிய அளவிலேயே இருக்கிறது. இதை உடைத்தெறிய திமுக தற்போது காய் நகர்த்தியிருக்கிறது. ஓபிஎஸ்ஸை எதிர்த்து தங்க தமிழ் செல்வனை களமிறக்கியுள்ளது. ஆண்டிப்பட்டி தொகுதியை தன் வசம் வைத்திருந்த தங்கத் தமிழ்செல்வனுக்கு ஆதரவு ஏராளம். போடியிலும் இவருக்கு செல்வாக்கு அதிகம். போடியில் கடந்த 2011,16ம் ஆண்டு தொடர் வெற்றி கண்ட ஓபிஎஸ், இம்முறையும் வெற்றி வாகையை சூட கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.Is OPS being defeated in the competition ..?

பல மாதங்களுக்கு முன்பே அவரது மகன்கள் அந்த தொகுதியில் தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர். போடி தொகுதிக்கு அதிமுக செய்த நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 2 முறை போடியில் வெற்றியை கண்ட ஓபிஎஸ், இந்த முறை மண்ணைக் கவ்வ வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.Is OPS being defeated in the competition ..?
 அதாவது, ஓபிஎஸை தோற்கடிக்க திமுக ஸ்கெட்ச் போட்டு விட்டதாம். அதற்கான முன்னோட்டம் தான் ஓபிஎஸ்க்கு எதிரான புகார் என்கிறார்கள் சிலர். வேட்பு மனு தாக்கல் விதிமுறையை ஓபிஎஸ் மீறியது பற்றி, திமுக புகார் அளித்திருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios