இந்து மக்களின் முதல் எதிரி பிரதமர் மோடி என தமிழ் மண் பத்திரிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளன் பேட்டியளித்ததற்கு எதிராக #இந்துதர்மத்தின்_எதிரிதிருமா என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

 

விசிக தலைவர் திருமாவளவன் ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களை பாராட்டி இந்து மதத்தை இழிவு படுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளார் என்கிற குற்றச்சாட்டுகள் ஏராளம்.  இந்நிலையில் இந்து மததித்தில் உள்ள அனைத்து பெண்களுமே விபச்சாரிகள் என்கிற ரீதியில் மனுதர்ம நூலில் உள்ளதாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், அவர் மன்னிப்பு கேட்பதாகவோ, பின்வாங்குவதாகவோ தெரியவில்லை. மாறாக மனுதர்ம நூலை எதிர்த்து போராட்டம் நடத்தி துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வந்தார். ஆனால், மனுதர்ம நூலில் பெண்கள் போற்றப்படுகிறார்களே தவிர இகழ்வாக நடத்தப்படவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்தப்பட்ட அந்த நூலை மொழிபெயர்த்த ஆங்கிலயேர்கள் கொச்சைப்படுத்தி எழுதியுள்ளார்கள் என்பதற்கு ஆதராமாக பல்வேறுபட்ட தரவுகளை ஆதரவாக காட்டினாலும் திருமாவளவன் ஏற்றுக்கொள்வதாக இல்லை. 

 

அந்த அம்னுதர்மநூலை கெட்டியாக பிடித்துக் கொண்டு தற்போது வரை அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில், 
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிரி தான் டாக்டர் தொல் திருமாவளவன். அதனால்தானே சில அரசியல் தலைவர்களுக்கு சிறுத்தைகளை கண்டால் பயம் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். 

 

இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் நான் என்று மார்தட்டிக்கொள்ளும் திருமாவளவன் இதுவரை இந்த மக்களுக்காக என்ன செய்துள்ளார்? இவர் இந்துவல்ல கிறிஸ்துவர். இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. கிறிஸ்தவர்களுக்காக குரல் கொடுக்கிறார் என்கிற விமர்சனங்கள் எழுந்து வந்தன.

 

இந்நிலையில், இந்து மக்களின் முதல் எதிரி பிரதமர் மோடி என தமிழ் மண் பத்திரிக்கைக்கு திருமாவளவன் பேட்டி அளித்திருந்தார். இதனையடுத்து  #இந்துதர்மத்தின்_எதிரிதிருமா என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி முதலிடத்தில் உள்ளது.