அதிகார வெறிபிடித்த சதிகார சண்டாளன் ஸ்டாலின், அமைச்சரின் மரணத்தில் மர்மம் என்று அவதூறு பரப்புகிறார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ  நாளேட்டில்  செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது. என்ன செய்வது அவர் வளர்ந்த இடமும், வளர்ந்த விதமும் அப்படி. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் அகோரமாய் படுகொலை செய்துவிட்டு பெற்றோரை பிடித்துவந்து தங்களது பிள்ளையே இல்லை என்று சொல்ல வைத்த  சண்டாள கூட்டத்தின் தலைவன் அல்லவா! 

 

நட்புக்கு நஞ்சூட்டி முடித்ததும் பெரம்பலூர் சாதிக், கே.கே நகர் பால்மலர், முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன், அண்ணாமலை, ரமேஷின் மொத்த குடும்பம். இப்படி எண்ணில்லா உயிர்களை பரலோகம் அனுப்பி வைத்த பாவிகளிடமிருந்து பண்பாட்டை எதிர்பார்க்க முடியும்! 90% நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீட்கப்பட முடியாத நிலையில் இயற்கை மரணமுற்ற முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வின் உயிரிழப்பை மர்மம் என்று பழி சுமத்தி அரசியல் பிழைப்புக்கு ஆகாரம் தேடுகிற ஸ்டாலின் ஒரு அதிகார வெறி பிடித்த கோமாளி என்பதை உலகம் அறியும்.  

அண்ணனை துருத்தி, தங்கையை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு சிக்கவைத்து அதிகாரத்தை தானும், தனக்குப் பின்னால் தன் மகனுமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற அதிகாரவெறி அவரை எப்படி ஆட்டிப்படைக்கிறது!  அமெரிக்க யேல் பல்கலைக்கழகம் வரை தன் திறமையால் கொடி நாட்டி வந்த பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுகவிற்கு இப்படி ஒரு கூமுட்டை தலைவரா என்று உலகமே குலுங்கி சிரிக்கும் அளவுக்கு பொது அறிவும் பொதுவாகவே அறிவும் அற்றவராக வலம்வரும் ஸ்டாலினின் ஒரே முதலீடு கொள்ளை பணமும், கொள்கையற்ற அவதூறுகளும்தான்

பெரம்பலூர் அனிதா தொடங்கி, சாத்தான்குளம் சம்பவம் வரை எங்கேயாவது பிணம் கிடைக்குமா என்று மாமிசத்திற்கு அலைகிற கழுகாக திருவாளர் துண்டுச்சீட்டு வெறிபிடித்து அலைகிறார். இந்த தேர்தலோடு திமுக என்கிற கட்சியே அஸ்தமிக்க போகிறது என்பதை தெரிந்துகொண்டு, அதனை தடுப்பதற்காக அரசியல் வழி தெரியாமல் புரளிகளை மட்டும் நம்பி நித்தம்நித்தம் குரளி வித்தை செய்கிறார். ஆனாலும் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் இதை நன்கறிவார்கள். 

 

சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் கூட வித்தியாசம் தெரியாதவராக.  87ம் 9ம் 107 என்று கணக்குப் போடுகிற ஸ்டாலின், ஒரு இயக்கத்தை தலைமை தாங்கி நடத்துவதற்கு தகுதியற்ற பஃபூன் என்பது நாடறிந்த கதையே. விரக்த்தியின் உச்சத்தில் விமர்சனம் என்ற பெயரில் தரம் தாழ்ந்து அரசியலை முன்னெடுக்கும் திமுகவுக்கு வரப்போகும் தேர்தலில் புதைகுழி தான் காத்திருக்கிறது. இவ்வாறு குத்தீட்டி பகுதியில் ஸ்டாலினை அதிமுக குத்தி கிழித்திருக்கிறது.