திமுக எம்பி கனிமொழி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், ஊழல் ராணி என்னும் ஹேஷ்டேக்கை திமுக எதிர்ப்பு அரசியல் கட்சியினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

திமுக எம்பி கனிமொழி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், ஊழல் ராணி என்னும் ஹேஷ்டேக்கை திமுக எதிர்ப்பு அரசியல் கட்சியினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Scroll to load tweet…

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்னும் தலைப்பில் திமுக எம்பி கனிமொழி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி தேசிய அளவில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ளார். மத்திய அரசியலில் வாய்ஸ் எடுபட்டாலும், உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் கனிமொழியை சற்று திமுகவினர் ஒதுக்கியே வருகின்றனர்.

Scroll to load tweet…

இருப்பினும், இந்த சட்டப்பேரவை தேர்தலில் தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்னும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவர் தனது 53வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி, திமுக எம்.பி., கனிமொழி முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், ஊழல் ராணி என்னும் ஹேஷ்டேக்கை திமுக எதிர்ப்பு அரசியல் கட்சியினர் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் டெர்ண்டாகி வருகிறது.