Asianet News TamilAsianet News Tamil

இந்து கோயில்களை இழிவு படுத்துவது வெறுப்பு அரசியல் இல்லையா திருமாவளவன்..? கிடுக்குப்பிடி போடும் பாஜக..!

ஹிந்து கடவுள்களை இழித்து பேசுபவர்களுக்கு எதிராக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று கூறி வெறுப்பை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Is it not hate politics to desecrate Hindu temples, Thirumavalavan? BJP to hold on
Author
Tamil Nadu, First Published Jan 24, 2022, 10:43 AM IST

கோவிலில் அசிங்கமான பொம்மைகள் என்று நீங்க பேசியது வெறுப்பு அரசியல் இல்லையா திருமாவளவன்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மதமாற்ற அழுத்தத்தால் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதமாற்றம் ஏதும் நடக்கவில்லை, ஹிந்து அமைப்புகள்தான் வெறுப்புப் பிரசாரம் செய்கின்றன. தமிழக அரசு இதனை வேடிக்கை பார்க்ககூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று சொல்லியுள்ள விடுதலைக் கட்சிகள் தலைவர் திருமாவளவன், சனாதன சக்திகளை வேரறுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். சனாதன தர்மம் என்பது ஹிந்து தர்மம். எனவே, அவர் இதன் மூலம், ஹிந்து தர்மத்தை வேரறுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டே பெரும்பான்மையான மதத்தை அழிக்க வேண்டும் என இவர் பகிரங்கமாக பேசியிருப்பதற்கு மத்திய மாநில அரசுக்ள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் அவரது எம்.பி பதவியையும் பறிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.Is it not hate politics to desecrate Hindu temples, Thirumavalavan? BJP to hold on

பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறும்போது, ‘’சனாதன தர்மத்தை (ஹிந்து மதத்தை) ஒழிப்போம் என்ற வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து கடவுள்களை இழித்து பேசுபவர்களுக்கு எதிராக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று கூறி வெறுப்பை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இது போன்ற வெறுப்பு பேச்சுக்கு எதிராகநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றால், முதல் நடவடிக்கை திருமாவளவன் அவர்களே, தங்கள் மீது தான் பாயும் என்று அறிந்து கொள்ளுங்கள்.

 மற்ற மதங்களை சேர்ந்த கடவுள்களை சாத்தான்கள் என்றும், தங்களின் மதத்தை பின்பற்றுபவர்களை தவிர மற்றவர்கள் புனிதமற்றவர்கள்,என்று சொல்லும் மத அடிப்படைவாதிகளின் மீது சட்டம் பாயட்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் வாகனத்தில் சென்று தங்களின் மதத்திற்கு அவர்களை மாற்ற, ஒரு மதத்தின் மீது அவதூறு மற்றும் ஏமாற்று, மோசடி பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை பாயட்டும். 

 

விரைவில், உங்கள் கட்சியின் உறுப்பினர்கள் வெறுப்பு பிரச்சாரத்தை தடுக்க, மதமாற்ற தடை சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை சட்டசபையில் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். உங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க, இனி ஹிந்து மதம் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை கைவிடுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார். 

 

கோவில் அசிங்கமான பொம்மைகள் என்று நீங்க பேசியது வெறுப்பு அரசியல் இல்லையா திருமாவளவன் ? எனவும் வலதுசாரிகள் கேட்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios